சின்ன அண்ணாமலை

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்[1].[2]

வாழ்க்கை வரலாறுதொகு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

தயாரித்த திரைப்படங்கள்தொகு

"ஐந்து லட்சம்', "கடவுளின் குழந்தை', "தங்க மலை ரகசியம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளர்.

வெளியிட்ட நூல்கள்தொகு

சின்ன அண்ணாமலை, தனது தமிழ்ப் பண்ணைப் பதிப்பகத்தின் வழியாகப் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

 1. பாரதிபிறந்தார்' கல்கி

பெயர்க் காரணம்தொகு

1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது.[3] இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது.[4] டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[5]

இயற்றியுள்ள நூல்கள்தொகு

 1. கண்டறியாதன கண்டேன்
 2. கதைக்குள்ளே கதை
 3. சர்க்கரைப் பந்தல்
 4. சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
 5. சிரிப்புக்கதைகள், தொகுத்துப்பதிப்பித்தவர் சீனி. விசுவநாதன் 1961 ஏப்ரல், மேகலைப் பதிப்பகம், சென்னை.
 6. சுவை நானூறு
 7. சொன்னால் நம்ப மாட்டீர்கள் (நூல்)
 8. தலையெழுத்து
 9. ராஜாஜி உவமைகள்[6]

வெளியிட்ட நூல்கள்தொகு

சின்ன அண்ணாமலை தனது தமிழ்ப்பண்ணையின் வழியாக பல நூல்களை வெளியிட்டார். அவற்றுள் சில:

 1. பாரதி பிறந்தார், கல்கி
 2. வ. உ. சிதம்பரனார், ம. பொ. சிவஞானம்

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்தொகு

 1. "அரசியல் தலைவர், பதிப்பக அதிபர் சின்ன அண்ணாமலை தயாரித்த திரைப்படங்கள்". மாலை மலர். பார்த்த நாள் 20 திசம்பர் 2013.
 2. "60 ஆண்டு வாழ்க்கையில் 50 ஆண்டுகளை அர்ப்பணம் செய்த சின்ன அண்ணாமலை". தினமலர். பார்த்த நாள் 20 திசம்பர் 2013.
 3. http://www.maalaimalar.com/2010/04/23074343/annamalai.html மணி விழாவில் சின்ன அண்ணாமலை மரணம்
 4. http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 5. "இந்த வாரம் கலாரசிகன்". தினமணி. பார்த்த நாள் 20 திசம்பர் 2013.
 6. "au:சின்ன அண்ணாமலை". Namakkal District Central Library. பார்த்த நாள் 20 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_அண்ணாமலை&oldid=2856821" இருந்து மீள்விக்கப்பட்டது