குமரி மலர் (இதழ்)

குமரி மலர் 1940 களின் முற்பகுதியில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஏ. கே. செட்டியார் ஆவார். இது துணுக்குச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டது. ஏ.கே.செட்டியார் தமது பயணக் கட்டுரைகள் அனைத்தையும் இந்நூலின் வழியேதான் பதிப்பித்தார்.

வரலாறு தொகு

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்திலும் அதற்குப் பிந்திய சில ஆண்டுகளிலும் (1940 களின் முற்பகுதியில்) புதிய இதழ்களை துவங்கி நடத்துவதற்கு அரசால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நெருக்கடி நிலையை மீறிச் சமாளிக்கும் விதத்தில் ஏ. கே. செட்டியார் ஒரு வழி கண்டுபிடித்தார். பத்திரிகை போலவும்- ஆனால் முறையான ஒரு பத்திரிகையாக இல்லாமல் புத்தகம் போலவும், ஆயினும் நேரான ஒரு புத்தகமாக அமையாது-'மாத வெளியீடு' ஆக ஒரு மலர் பிரகரிக்கலாம் என்று கண்டு, 'குமரி மலர்’ என்ற மாதம் ஒரு புத்தக வெளியீட்டைத் துவக்கினார். ‘குமரி மலர்' காட்டிய வழியில் தொடர்ந்து ஏகப்பட்ட மலர்கள் தமிழகத்தில் அந்நாட்களில் தோன்றின.[1]

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_மலர்_(இதழ்)&oldid=3325681" இலிருந்து மீள்விக்கப்பட்டது