தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்
தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்கள், பொதுவுரிமை ஆக்கப்பட்டு, அவர்தம் மரபுரிமையருக்கு தமிழக அரசு பரிவுத்தொகை வழங்கும் திட்டமாகும். மேலும், இதன்கீழ் வரும் நூல்களைத் தமிழ்நாடு அரசின்கீழ் வரும் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் இணையக்கல்விக் கழகத்தின்[1] வழியே மின்னூல்களாக மாற்றியும் வருகிறது. அந்நூல்களை த. இ. க. க. இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கிக் கொள்ளலாம்.[2]
நோக்கம்
தொகுதமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக்கொண்டு ஆக்கப்பட்ட நூல்கள் தடையின்றி தமிழ் மக்கள் அனைவரையும் சென்று அடைதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவை நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன.
தகுதி
தொகுஅச்சான்றோர்கள் உருவாக்கிய (1) நூல்களின் எண்ணிக்கை, (2) அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், (3) அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் பரிவுத்தொகை வழங்குவர். (4) காப்புரிமைச் சட்டப்படி எழுத்தாளர் மறைந்து 60 ஆண்டுகள் கழித்துதான் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும்.[சான்று தேவை]
பரிவுத்தொகை வழங்கும் முறை
தொகுதமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கான பரிவுத்தொகையைப் பெற அத்தமிழறிஞர்தம் மரபுரிமையாளர்கள் தம் மரபுரிமைச் சான்றிதழை வழங்க வேண்டும்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- தமிழகம்.வலை தளத்தில், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பரணிடப்பட்டது 2012-06-20 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் இணையக் கல்விக்கழகம்
- கீற்று இணைய இதழ் செய்தி
- தமிழ் ஒன் இந்தியா இணைய இதழ் செய்தி
- நக்கீரன் இணைய இதழ் பரணிடப்பட்டது 2009-06-01 at the வந்தவழி இயந்திரம்
- மாலைசுடர் இதழ் பரணிடப்பட்டது 2014-08-14 at the வந்தவழி இயந்திரம்
- கூட்டாஞ்சோறு வலைவாசல் செய்தி
- அலைகள் வலைவாசல் செய்தி