சீனி. விசுவநாதன்
சீனி. விசுவநாதன் (பிறப்பு: நவம்பர் 22, 1934)என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்.சேலம் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிறந்தவர். தந்தை பி.வி. சீனிவாசன், தாய் கமலாம்பாள். மகாகவி பாரதி குறித்து ஆய்வு நோக்கில் இவர் 14 நூல்களையும், பாரதியின் கருத்துச் செல்வங்களைக் கண்டறிந்து 9 நூல்களைப் பதிப்பித்தும், 4 நூல்களைத் தொகுத்தும் பல ஆண்டுகளாகப் பாரதிப் பணிகளைச் செய்து வருபவர். தமிழ்நாடு அரசின் 2004 ஆம் ஆண்டுக்கான பாரதியார் விருது பெற்றவர். இவர் எழுதிய "பாரதி தேடல்கள்: சில நினைவலைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.