பாரதியார் விருது

பாரதியார் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலம் ஆண்டுதோறும் பாரதியார் நெறி பரப்பும் தகமையாளர்களில் ஒருவரைத் தேர்வு செய்து வழங்கப்படும் விருதாகும். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறை அரசாணை எண்.32, நாஅள் 08-12-1997 மூலம் 1997 ஆண்டிலிருந்து இவ்விருது வழங்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டில் ரூபாய் இருபதாயிரம் பணமுடிப்பும் தகுதியுரையும் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு இலட்சம் பணமுடிப்பும் எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.[1]

விருது பெற்றவர்கள் பட்டியல் தொகு

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 கவிஞர் மதிவண்ணன் 1997
2 குமரி அனந்தன் 1998
3 வலம்புரி ஜான் 1999
4 கவிஞர் வாலி 2000
5 பெ. சு. மணி 2001
6 கே. வி. கிருஷ்ணன் 2002
7 ரா. அ. பத்மநாபன் 2003
8 சீனி. விசுவநாதன் 2004
9 ----- 2005
10 தமிழருவி மணியன் 2006
11 கவிஞர் சௌந்தரா கைலாசம் 2007
12 முனைவர் இரா. மணியன் 2008
13 டாக்டர் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் 2009
14 நா. மம்மது 2010
15 முனைவர் இரா. பிரேமா 2011
16 பாரதிக் காவலர் கு. இராமமூர்த்தி 2012

குறிப்பு

  • 2005 ஆம் ஆண்டில் விருது வழங்கப்படவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2044/மாசி 22, ந. க. எண். ஆமொ2/1139/2013, நாள்: 06-03-2013 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதியார்_விருது&oldid=2576590" இலிருந்து மீள்விக்கப்பட்டது