தமிழ் ஹரிஜன் (இதழ்)
தமிழ் ஹரிஜன் 1940 களில் இந்தியாவில் இருந்து கிழமை தோறும் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது காந்தி நடத்திவந்த ஹரிஜன் இதழின் தமிழ்ப் பதிப்பாக இருந்தது. இதைத் தமிழில் கொண்டுவந்தவர் சின்ன அண்ணாமலை ஆவார். இதன் ஆசிரியராக பொ. திருகூடசுந்தரம் இருந்தார்.[1] இது அரிசனங்கள் என ஒதுக்கப்பட்டு வாழ்ந்த மக்களுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகளின் கருத்துரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதழாசிரியர் | வெ. இராமலிங்கம் பிள்ளை, பொ. திருகூடசுந்தரம் |
---|---|
வகை | காந்தியம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
முதல் வெளியீடு | 1946 |
நிறுவனம் | தமிழ்ப் பண்ணை |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வரலாறு
தொகு1946 இல் காந்தி சென்னைக்கு வந்தபோது தமிழ் ஹரிஜன் இதழைத் துவக்கிவைத்தார். 1946 ஏப்ரல் 16 அன்று இந்த இதழின் முதல் பிரதியை சின்ன அண்ணாமலை வெளியிட்டார். இந்த இதழ் எட்டு பக்கங்களில் வெளியானது. இந்த இதழின் ஆசிரியராக வெ. இராமலிங்கம் பிள்ளையும் நிர்வாக ஆசிரியராக சின்ன அண்ணாமலையும் இருந்தனர். இதன் 11வது இதழில் பொ. திருகூடசுந்தரமும் ஆசிரியராக இணைந்தார்.[2] காந்தி இறக்கும்வரை இந்த இதழ் வெளியானது.
தொகுப்பு நூல்
தொகுஇந்த இதழ் வெளியான முதல் ஆண்டில் வெளியான 52 தமிழ் ஹரிஜனின் இதழ்களின் தொகுப்பு முல்லை பதிப்பகத்தினால் தமிழ் ஹரிஜன்: காலத்தின் மனசாட்சி என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
உசாத்துணைகள்
தொகு- ↑ சின்ன அண்ணாமலை, சொன்னால் நம்பமாட்டீர்கள் (நூல்), பக்கம் 104-105
- ↑ "நூல் வெளி: 'தமிழ் ஹரிஜன்' தீண்டாமைக்கு எதிரான குரல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.