நகரத்தார் சமுதாய ஊர்கள்

நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாட்டில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களில் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் நகரத்தார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வாழும் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. செட்டிநாட்டின் மையப் பகுதியாக குன்றக்குடி அமைந்துள்ளதால் அதற்கு கிழக்கே, தெற்கே, மேற்கே நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் கீழ வட்டகை, தெற்கு வட்டகை, மேல வட்டகை என்ற பெயர்களால் வழங்குகின்றன. புதுக்கோட்டை சமஸ்தான பகுதியில் நகரத்தார்கள் வாழ்ந்துவரும் ஊர்கள் கீழப்பத்தூர், மேலப்பத்தூர் நீண்டகரைப் பிரிவு என்ற பெயர்களால் வழங்குகின்றன. மேற்கூறிய ஆறு வட்டகையிலும் அமையாத ஊர்கள் பதினாறூர் வட்டகை என்ற பெயரில் வழங்குகின்றன.

ஆக மொத்தமாக நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்துவரும் செட்டிநாடு ஏழு வட்டகைகளாக(பகுதிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது.

ஏழு வட்டகைகள்

தொகு

1. கீழ வட்டகை

2. தெற்கு வட்டகை

3. மேல வட்டகை

4. கீழப்பத்தூர்

5. மேலப்பத்தூர்

6. பதினாறூர் வட்டகை

7. நீண்டகரைப் பிரிவு

எழுபத்தாறு ஊர்கள்

தொகு

வட்டகை வாரியாக எழுபத்தாறு (76) ஊர்கள்[1]

1.கீழ வட்டகை (3)

1.தேவகோட்டை

2.சண்முகநாதபுரம்

3.சொர்ணநாதபுரம் (தாணிச்சாவூரணி)

2.தெற்கு வட்டகை (19)

4.நாட்டரசன் கோட்டை

5.பாகனேரி

6.கண்டரமாணிக்கம்

7.அலவாக்கோட்டை

8.அரண்மனை சிறுவயல்

9.க.சொக்கநாதபுரம்

10.கீழப்பூங்குடி

11.ஒக்கூர்

12.சொக்கலிங்கபுரம் (மதகுபட்டி)

13.நடராஜபுரம்

14.வெற்றியூர்

15.பட்டமங்கலம்

16.காளையார் மங்கலம்

17.கருங்குளம்

18.அளகாபுரி (இவ்வூர் கொல்லங்குடி.அளகாபுரி என்றும் நாட்டரசன்கோட்டை.அளகாபுரி என்றும் வழங்கப்படுகிறது)

19.செம்பொனூர்

20.பனங்குடி

21.சக்கந்தி

22.சோழபுரம்

3.மேல வட்டகை (15)

23.கீழச்சீவல்பட்டி

24.அளகாபுரி (பில்லமங்களம்.அளகாபுரி)

25.நெற்குப்பை

26.கண்டவராயன்பட்டி

27.சிறுகூடல்பட்டி

28.பூலாங்குறிச்சி

29.நாச்சியாபுரம்

30.ஆ.தெக்கூர்

31.உலகம்பட்டி

32.செவ்வூர்

33.விராமதி

34.மகிபாலன்பட்டி

35.சிராவயல்

36.பிள்ளையார்பட்டி

37.ஆவினிப்பட்டி

4.கீழப்பத்தூர் (4)

38.அரிமழம்

39.இராமச்சந்திராபுரம் (கடியாபட்டி)

40.இராயவரம்

41.தேனிப்பட்டி

5.மேலப்பத்தூர் (14)

42.வலையப்பட்டி

43.நற்சாந்துபட்டி

44.வேந்தன்பட்டி

45.மேலைச்சிவபுரி

46.பொன்.புதுப்பட்டி

47.வேகுப்பட்டி

48.கொப்பனாபட்டி

49.விரையாச்சிலை

50.இராங்கியம்

51.பனையப்பட்டி

52.குருவிக்கொண்டான்பட்டி

53.மிதிலைப்பட்டி

54.குழிபிறை

55.வி.லெட்சுமிபுரம் (நெய்க்கோணம் லெட்சுமிபுரம்)

6.பதினாறூர் வட்டகை (20)

56.காரைக்குடி

57.பள்ளத்தூர்

58.கண்டனூர்

59.புதுவயல்

60.கோட்டையூர்

61.உ.சிறுவயல்

62.பலவான்குடி

63.ஆ.முத்துப்பட்டணம்

64.அரியக்குடி

65.கொ.லெட்சுமிபுரம்

66.அளகாபுரி (இவ்வூர் கோட்டையூர் அளகாபுரி என்றும் கண்டனூர் அளகாபுரி என்றும் வழங்கப்படுகிறது)

67.கானாடுகாத்தான்

68.ஆத்தங்குடி

69.கல்லல்

70.கொத்தமங்கலம்

71.நேமத்தான்பட்டி

72.கல்லுப்பட்டி

73.சொக்கலிங்கம் புதூர் (சொக்கனேந்தல்)

74.மாநகரி

75.அமராவதிபுதூர்

7.நீண்டகரைப் பிரிவு (1)

76.கோனாபட்டு

இதையும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. சோமலெ (1984). செட்டிநாடும் செந்தமிழும். வானதி பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரத்தார்_சமுதாய_ஊர்கள்&oldid=3590660" இலிருந்து மீள்விக்கப்பட்டது