சா. இராம. முத்தையா செட்டியார்
சாத்தப்பன் இராமநாதன் முத்தையா செட்டியார் (Sathappan Ramananathan Muthiah Chettiar), பிரித்தானிய இந்தியாவின் தன வணிகர், வங்கியாளர் மற்றும் கொடையாளர் ஆவார். இவர் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா மற்றும் பர்மாவில் வணிகம் செய்தவர். இவரது மகன்களில் வங்கியாளர் சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார் ஒருவர் ஆவார்.
சா.இராம.முத்தையா செட்டியார் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1840 கானாடுகாத்தான், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 1900 |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | மீனாட்சி ஆச்சி |
பெற்றோர் | சா.இராமநாதன் செட்டியார் (தந்தை) |
கொடைகள்
தொகுசிதம்பரம் நடராஜர் கோயிலை பல இலட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தார். மேலும் சிதம்பரத்தில் சத்திரம் ஒன்றை நிர்மானித்தார். மேலும் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தை நிறுவ நன்கொடை அளித்தார்.
குடும்பம்
தொகுமுத்தையா செட்டியாரின் குடும்பம்:
- சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார் (மகன்)
- சா. இராம. மு. இராமசாமி செட்டியார் (மகன்)
- சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் (மகன்)
- மு. அ. முத்தையா செட்டியார் (அண்ணாமலை செட்டியாரின் மகன்)
மேற்கோள்கள்
தொகு- Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume. 1941. p. 1.