சா. இராம. மு. இராமசாமி செட்டியார்

இந்திய அரசியல்வாதி

திவான் பகதூர் சாத்தப்பன் இராமநாதன் முத்தையா இராமசாமி செட்டியார், (1872 – 5 நவம்பர் 1918) வணிகரும், வங்கியாளரும்,சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார்.

திவான் பகதூர்
சாத்தப்பன் இராமநாதன் முத்தையா இராமசாமி செட்டியார்
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர்
பதவியில்
டிசம்பர், 1909 – 1912
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1872
இறப்பு5 நவம்பர், 1918 (வயது 46)
சென்னை
தேசியம்இந்தியர்
வேலைவங்கியாளர்
தொழில்தன வணிகர்

குடும்பம்

தொகு

சா. இராம. முத்தையா செட்டியாரின் மூன்று மகன்களில் இராமசாமி செட்டியார் இரண்டாமவர். இவருக்கு மூத்தவர் சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார், இளையவர் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவார்.

இந்தியன் வங்கி

தொகு

1906-ஆம் ஆங்கிலேயர்கள் நடத்திய அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி அடைந்த போது, இதனை வாங்கி இந்தியன் வங்கி எனப்பெயரிட்டு நிறுவியர்களில் இராமசாமி செட்டியாரும் ஒருவர் ஆவார். 1907-ஆம் ஆண்டில் இராமசாமி இந்தியன் வங்கி இயக்குநர் பதவியிலிருந்து விலகியதால், அவரது தம்பி சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் இந்தியன் வங்கியின் இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

அறக்கொடைகள்

தொகு

1912-ஆம் ஆண்டில் இராமசாமி செட்டியார் சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் விநியோகிக்க ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கினார். 1913-ஆம் ஆண்டில் சிதம்பரத்தில் தனது சொந்த செலவில் இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்.

மேற்கோள்கள்

தொகு
  • Bhargava, Prag Narain (1912). Supplement of Who's who in India. Lucknow: Newul Kishore Press. p. 73.
  • Muthiah, S. (19 April 2004). "High school to university". தி இந்து: Metro Plus இம் மூலத்தில் இருந்து 8 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070808012253/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/04/19/stories/2004041900220300.htm. 
  • Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume. 1941. p. 1.