அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி

அர்பத்நாட் வங்கி வீழ்ச்சி (Arbuthnot Bank crash) என்பது 1906 அக்டோபரில் பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் பிரிட்டனுக்கு சொந்தமான ஒரு முக்கிய நிதி நிறுவனமான அர்பத்நாட் அண்ட் கோ நொடிந்து போனதைக் குறிப்பதாகும். இந்த நிகழ்வு தமிழகத்தில் இந்திய சுதந்திர இயக்கத்தை பாதித்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

1906 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், மதராசு நகரம் இதுவரை கண்டிராத மிக மோசமான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் மதராசில் மூன்று பிரபலமான பிரித்தானிய வணிக நிறுவனங்களில், ஒன்று நொடிந்துபோனது.

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிஸ் லதூர் என்பவரால் பிரான்சிஸ் லதூர் அண்ட் கோ என்ற பெயரில் ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் 1803வாக்கில் அர்பத்நாட் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பணியில் சேர்ந்தார். பிரான்சிஸ் லதூர் ஓய்வுபெற்ற பிறகு, இந்த நிறுவனம் அர்பத்நாட், டிமோன்டி அண்ட் கம்பனி என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு அர்பத்நாட் அண்ட் கம்பனி என்ற பெயரைப் பெற்றது. வங்கி என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் இது ஒரு வங்கி அல்ல. இது ஒரு வணி நிறுவனம் ஆகும். வாடிக்கையாளர்களிடமிருந்து வைப்புத் தொகைகளைப் பெற்று உற்பத்தி, வணிகம், காப்பித் தோட்டம், அவுரி தோட்டம் போனவற்றில் முதலீடு செய்தது. வைப்புத் தொகைக்கு ஐந்து விழுக்காடு வட்டியாக வழங்கப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்தியாவில் பலர் இந்த வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்தனர். அர்பத்நாட் அண்ட் கம்பனி லண்டனில் இருந்து செயல்பட்ட பி. மாக்பேடன் அண்ட் கோ என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த பி. மாக்பேடன் அண்ட் கோ நிறுவனம், அர்பட்நாட் அண்ட் கோவின் லண்டன் கிளையைப் போலவே செயல்பட்டுவந்தது. அதனை பேட்ரிக் மெக்ஃபடைன் என்பவர் கவனித்துவந்தார். இந்த மெக்ஃபடைன், இலண்டன் பங்குச் சந்தையில் ஒரு சூதாடியைப் போல முதலீடுசெய்துவந்தார். இந்த முதலீடுகளால் நிறுவனத்தின் பணத்தின் பெரும் தொகையை இழக்கிறார். இதன் திவாலுக்கு முன்னர், அர்பத்நாட் வங்கியில் 11,000 முதல் 12,000 பேர் வரை பணியாற்றினர். 7,000 பேர் அதில் கணக்கு வைத்திருந்தனர். 1,000,000 டாலர் கடன்களும் இருந்தன. மக்ஃபேடியனின் கடன்கள் 400,000 டாலர் என்றும் 1,000 கடன் வழங்குநர்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. [1] [2]

1906 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் லண்டன் ஓல்ட் ஸ்ட்ரீட்டில், சுரங்க ரயில் முன்பு விழுந்து மக்ஃபாடியன் தற்கொலை செய்துகொணடார். இதற்கு அடுத்த நாள், அக்டோபர் 22ஆம் நாள் அர்பட்நாட் அண்ட் கம்பனி தாங்கள் திவாலாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சரிவு ஏற்பட காரணமான மோசடி நடவடிக்கைகளுக்காக அர்பூட்நாட் விசாரிக்கப்பட்டு, "18 மாதங்கள் கடும் சிறைத்தண்டனை" பெற்றார்.

வங்கியின் முதலீட்டார்கள் சார்பாக அர்பூட்நாட் வங்கியுடன் போராட பிரபல வழக்கறிஞர் வி. கிருஷ்ணசாமி ஐயரை அணுகி அவர்களுக்கான இழப்பீடைப் பெற்றனர்.அர்பூட்நாட் வங்கியின் சிதைவுக்குப் பின்னர் நிறுவப்பட்ட இந்தியன் வங்கியின் நிறுவனர்-இயக்குநர்களில் ஒருவராக இவர் இருந்தார்.

குறிப்புகள் தொகு

  1. [1]
  2. Knights, Samantha (2004). "Pooling Arrangements in Cross-Border Insolvencies". ChaseCambria. பார்க்கப்பட்ட நாள் 13 July 2020.