நா வள்ளி

நகரத்தாரியல் ஆய்வாளர் ஆவார்

நா வள்ளி (நவம்பர் 10, 1950) என்னும் வள்ளி சொக்கலிங்கம் நகரத்தாரியல் ஆய்வாளர் ஆவார்[1].

நா வள்ளி
நா வள்ளி
பிறப்புநவம்பர் 10, 1950
கானாடுகாத்தான் இராமநாதபுரம் மாவட்டம்( 1984 முதல் சிவகங்கை மாவட்டம்) தமிழ் நாடு[1]
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்வள்ளி சொக்கலிங்கம்
கல்விM.A.,B.Ed.,Ph.D., P.G. Dip.In Epigraphy & Archaeology
அறியப்படுவதுநகரத்தாரியல் ஆய்வாளர்
சொந்த ஊர்காரைக்குடி
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
கி.சொக்கலிங்கம்

வாழ்க்கை குறிப்பு

தொகு

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் 10.11.1950இல் பிறந்து, காரைக்குடி கி.சொக்கலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை துணைவி ஆனவர். எம்.ஏ., பி.எட்., டி.இ.ஏ., பட்டங்களை பெற்ற இவர், காரைக்குடி இராமசாமி தமிழ் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.[2][1]

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால ஆய்வுத் திட்டத்தின் கீழ் 'சிற்பக்கலையின் சிறப்பும் சிற்பக்கலைக்கு முகவையின் பங்கும்' என்ற ஆய்வைச் செய்துள்ளார்.[1] இவர் எழுதிய 'திருப்பத்தூர்' என்னும் நூல் தொல்பொருள் ஆய்வுத் துறையால் வெளியிடப் பெற்றுள்ளது.[3]

'நகரத்தாரின் அறப்பணிகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[1]

சிற்பக்கலை, கல்வெட்டு மற்றும் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]

எழுதிய நூல்கள்

தொகு

1.திருப்பத்தூர்(1981), தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை.[3]

2. நகரத்தாரின் அறப்பணிகள்(2001), கிருஷ்ணா பதிப்பகம், காரைக்குடி.[4]

3. காளையார்கோவில் புராணம் உரைச் சுருக்கம் (2015)[5]

4. கோவிலூர்ப் புராணம் விளக்க உரை (2014), கோவிலூர் மடாலயம்.[6]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "நகரத்தாரியல் ஆய்வாளர் நா.வள்ளி ஆச்சி". நமது செட்டிநாடு - பழ.கைலாஷ். March 2023. http://www.namadhuchettinad.com/magazine.html. 
  2. "இராமசாமி தமிழ்க் கல்லூரி". Archived from the original on 2020-09-29. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 "திருப்பத்தூர்- வள்ளி சொக்கலிங்கம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "நகரத்தார் அறப்பணிகள்". Archived from the original on 2020-11-25.
  5. "காளையார்கோவில் புராணம் உரைச் சுருக்கம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "கோவிலூர்ப் புராணம் விளக்க உரை". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா_வள்ளி&oldid=4041697" இலிருந்து மீள்விக்கப்பட்டது