செட்டிநாடு சமையல்
செட்டிநாடு சமையல் என்பது தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் செட்டிநாடு என்ற பகுதியில் வழக்கத்தில் உள்ள சமையல் மரபு. இப்பகுதியில் வாழும் நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தவர்கள் வாய்ப்புப் பெற்ற வணிக இனத்தவர்கள் ஆவர் . செட்டிநாட்டு சமையல் வாசனைச் சரக்குகளும் நறுமணப் பண்புகளும் நிறைந்த ஒரு இந்திய சமையல் வகை ஆகும்.
சமையல் |
இது சமையல் முறை கட்டுரைத் தொடரின் பகுதியாகும் |
செய்முறைகளும் சமையல் பொருள்களும் |
---|
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள் சமைத்தலில் உள்ள அளவுகள் |
தமிழர் சமையல் |
உணவுப் பொருட்கள் பட்டியல்கள் |
பிராந்திய சமையல் முறை |
உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன் |
See also: |
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள் Wikibooks: Cookbook |
செட்டிநாட்டு சமையலில், இறைச்சி உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் பல்வகை வாசனைச் சரக்குகள் பிரபலமானவை. வழமையான உணவுக்கு சுவை கூட்டுவது, அவ்வப்போது அரைத்துச் சேர்க்கும் காரமும் நெடியும் நிறைந்த மசாலாக்கள் மற்றும் மேல் அலங்காரமாக வைக்கப்படும் அவித்த முட்டை போன்றனவாகும். இந்த வறண்ட வெப்ப சூழலில், உப்புக்கண்டம், காய்கறி வற்றல் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். அசைவ உணவு என்பது மீன், இறால் மற்றும் நண்டு வகைகள், கோழி மற்றும் வெள்ளாட்டு இறைச்சி என்பது மட்டுமே. செட்டியார்கள் பன்றி மற்றும் மாட்டு இறைச்சியினை உண்பதில்லை.
பெரும்பாலான உணவு வகைகள் அரிசிச் சாதம் மற்றும் அரிசி கலந்து செய்த தோசை, ஆப்பம், இடியாப்பம், அடை மற்றும் இட்லி போன்றவற்றுடன் உண்ணப்படுகின்றன. பர்மா போன்ற நாட்டினரின் வணிகத் தொடர்பால் கார் அரிசியை வேக வைத்து புட்டு செய்கிறார்கள்.
செட்டிநாடு சமையல் பல்வகை சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை அளிக்கின்றன. சில பிரபலமான சைவ சிற்றுண்டிகள்:
- இடியாப்பம்
- பணியாரம்
- வெள்ளைப் பணியாரம்
- கருப்பட்டிப் பணியாரம்
- பால் பணியாரம்
- குழிப்பணியாரம்
- கொழுக்கட்டை
- மசாலா பணியாரம்
- அடிகூழ்
- கந்தரப்பம்
- சீயம்
- மசாலா சீயம்
- கவுணி அரிசி
- அதிரசம்
- கும்மாயம்
பயன்படுத்தப்படும் வாசனைச் சரக்குகள்
தொகுசெட்டிநாட்டு சமையலில் பயன்படும் வாசனைச் சரக்குகள்:
- மராத்தி மொக்கு (உலர்ந்த மலர் நெற்று),
- அனாசிப்பூ (star anise)
- கல்பாசி (a lichen)
- புளி
- காய்ந்த மிளகாய் வற்றல்
- சீரகம்
- லவங்கப் பட்டை
- ஏலக்காய்
- பிரிஞ்சி இலை,
- மிளகு
- பெருங்காயம்