பருப்பு

(பருப்புகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பருப்பு என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர்ந்த பட்டாணி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளைக் குறிக்கிறது. இந்த பருப்புகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு நீர்ம உணவுகளும் தால் என அழைக்கப்படுகிறது. இந்த பருப்புகள் தெற்காசிய நாடுகளில் மிக முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்றாக உள்ளன, மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் முக்கிய உணவு வகைகளில் ஒன்றாகும்.[1]

பருப்பு
3 types of lentil.png
மாற்றுப் பெயர்கள்தால், பருப்பு, பப்பு
பகுதிஇந்தியா

பயன்பாட்டுதொகு

பொதுவாக வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. வெளிப்புற தோல் நீக்கப்படாமலும், நீக்கியும், பாதியாக உடைக்கப்பட்டும் பயன்படுத்தப்படுகிறது. 1. தோல் நீக்கப்படாதவை - எ.கா. கருப்பு உளுந்து, பாசிப்பயறு 2. தோல் நீக்கப்பட்டவை - எ.கா முழு வெள்ளை உளுந்து, பாசிப்பருப்பு 3. பாதி உடைத்தவை - எ.கா. வெள்ளை உளுந்து உடைத்தது [1]

ரொட்டி அல்லது சப்பாத்தி அல்லது அரிசி போன்ற உணவுகளுடன் உண்ணப்படுகிறது. இவ்வகை பயன்பாடு வங்காளத்தில் இது தால்பகத் என்று அறியப்படுகிறது. சில பருப்பு வகைகள் உப்புடன் வறுக்கப்பட்டு சிற்றுண்டியாக உண்ணப்படுகின்றன. பல்வேறு மசாலாப் பொருட்களுடன் சேர்த்து மசாலா சுண்டல் போன்றும் உண்ணப்படுகிறது.

சொற்பிறப்புதொகு

தால் என்ற வார்த்தை சமஸ்கிருத சொல். "பிளவு" எனப் பொருள்படும்.[2]

பயன்படுத்தும் முறைதொகு

இந்தியத் துணைக்கண்டத்தில் அரிசி, ரொட்டி , சப்பாத்தி மற்றும் நானுடன் சாப்பிடுகிறார்கள். இது சமைக்கப்பட்டு, வழங்கப்படும் முறை, ஒவ்வோரு பகுதிக்கும் மாறுபடும். தென் இந்தியாவில், சாம்பார் என்று அழைக்கப்படும் உணவை தயாரிப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பப்பு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்துதொகு

100 கிராம் அளவுகளில், சமைத்த (வேகவைத்த) பருப்பு (தால்) 9% புரதம், 70% நீர், 20% கார்போஹைட்ரேட்டுகள் (8% ஃபைபர் உள்ளடக்கியது) மற்றும் 1% கொழுப்பு ஆகியவை உள்ளன.[3] சமைத்த பருப்பில் (100 கிராமுக்கும்) பி வைட்டமின் , போலேட் (45%) மற்றும் மாங்கனீசு (25%) மிதமான அளவு தயாமின் (11 % ) மற்றும் இரும்பு (19%) மற்றும் பாஸ்பரஸ் (18%) போன்ற பல உணவுத் தாதுக்கள் உள்ளன .[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Davidson, Alan; Jaine, Tom (2014-01-01). "Dal" (in en). The Oxford Companion to Food. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-967733-7. https://books.google.com/books?id=RL6LAwAAQBAJ&lpg=PP1&pg=PA246. 
  2. John Ayto (2012). The Diner's Dictionary: Word Origins of Food and Drink. Oxford University Press. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-964024-9. https://books.google.com/books?id=NoicAQAAQBAJ&pg=PA116. 
  3. 3.0 3.1 "Lentils, mature seeds, cooked, boiled, without salt per 100 g". Nutritiondata.com by Conde Nast; from USDA National Nutrient Database, Standard Reference 21. 2014. 14 ஜனவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பருப்பு&oldid=3562050" இருந்து மீள்விக்கப்பட்டது