ரொட்டி (roti) (சப்பாத்தி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு உரொட்டி ஆகும். இது பொதுவாக கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது, பாரம்பரியமாக ஆட்டா மாவு என்று அழைக்கப்படும் மாவில் தண்ணீரை விட்டு பிசைந்து தயாரிக்கப்படுகிறது.[4][5] ரோட்டியானது இந்தியா, பாக்கித்தான், நேபாளம், இலங்கை,சிங்கப்பூர், மாலைத்தீவுகள், மலேசியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் உண்ணப்படுகிறது. மேலும் இது ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி பிஜி, மொரிசியசு மற்றும் கரிபியன் பகுதிகளில் குறிப்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஜமேக்கா, கயானா மற்றும் சுரிநாம் ஆகிய பகுதிகளிலும் உண்ணப்படுகிறது. இதன் வரையறுக்கப்பட்ட தன்மையானது இது புளிக்கவைக்கப்படாததாக உள்ளது ஆகும். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஐக்கிய மாநிலங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் ஒரு நிமிடத்திற்குள் சமைக்கப் பயன்படும் தானியங்கி ரோட்டிசெய்வான்களைச் சிலர் பயன்படுத்துகின்றனர்.

உரோட்டி
Roti
இந்திய தட்டை ரோட்டி, சப்பாத்தி என்றும் அழைக்கப்படுகிறது.
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்[1][2][3]
ஆக்கியோன்சிந்துவெளி நாகரிகம்[1]
முக்கிய சேர்பொருட்கள்கோதுமை மாவு
வேறுபாடுகள்சப்பாத்தி, மக்கி டி ரோட்டி, ரிமாலி ரோட்டி, தந்தூரி ரோட்டி, ரோடி காய்ய், பரத்த

சொற்பிறப்பு

 
பாக்கித்தானில் ரோட்டி

ரோட்டி என்ற சொல்லானது சமசுகிருத சொல்லான रोटिका (ரோட்டிக்கா) என்ற சொல்லில் இருந்து தோன்றியது, இதன் பொருள் "உரோட்டி".[6] என்பதாகும். பிற மொழிகளில் இதன் பெயர் பின்வருமாறு: Hindi: रोटी; அசாமிய மொழி: ৰুটী; Nepali : रोटी; Bengali: রুটি; சிங்களம்: රොටි; குசராத்தி: રોટલી; மராத்தி: पोळी; ஒடியா: ରୁଟି; மலையாளம்: റൊട്ടി; கன்னடம்: ರೊಟ್ಟಿ; தெலுங்கு: రొట్టి; தமிழ்: ரொட்டி; Urdu: روٹی; Dhivehi: ރޮށި; Punjabi: ਰੋਟੀ,ਫੂਲਕਾ; தாய்: โรตี. மேலும் இது சிந்தி மொழியில் மானி எனவும், வங்காள மொழியில் ரடி என்றும், மற்றும் பஞ்சாபி மொழி மற்றும் சராய்கி மொழிகளில் புல்கா என அழைக்கப்படுகிறது.

Indian bread (chapati/roti) plain, commercially prepared
உணவாற்றல்297 கலோரி (1,240 கிசூ)
46.36 g
சீனி2.72
நார்ப்பொருள்4.9 g
7.45 g
11.25 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(48%)
0.55 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(17%)
0.2 மிகி
நியாசின் (B3)
(45%)
6.78 மிகி
(0%)
0 மிகி
உயிர்ச்சத்து பி6
(21%)
0.270 மிகி
இலைக்காடி (B9)
(0%)
0 மைகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.88 மிகி
உயிர்ச்சத்து கே
(0%)
0 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(9%)
93 மிகி
இரும்பு
(23%)
3 மிகி
மக்னீசியம்
(17%)
62 மிகி
மாங்கனீசு
(0%)
0 மிகி
பாசுபரசு
(26%)
184 மிகி
பொட்டாசியம்
(6%)
266 மிகி
சோடியம்
(27%)
409 மிகி
துத்தநாகம்
(17%)
1.57 மிகி
நீர்33 g
Selenium53.7 ug

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

வகைகள்

இந்தியத் துணைக்கண்டம்

உலகின் பல்வேறு கலாச்சாரங்களில், இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்காவரையிலும் ஓசியானியா வரையிலும் மலாய் தீபகற்பம்வரையிலும் அமெரிக்கர்கள்வரையிலும் உரொட்டியில் பல வேறுபாடுகளைக் காணலாம்.[7] இந்தியத் துணைக்கண்டத்தில் பாரம்பரியமாக தட்டையாக தயாரிக்கப்படுவத் ரோட்டி என்று அழைக்கப்படுகிறது. இதனுடன் பொதுவாக சமைத்த காய்கறிகளையோ அல்லது கறியையோ சேர்த்து சாப்பிடுவது வழக்கம்; இது பெரும்பாலும் கோதுமை மாவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இந்த மாவைத் தட்டையாக்கி தீமீது வைக்கப்பட்ட தவா என்றழைக்கப்படும் இரும்புத் தகட்டின்மீது போட்டு சுட்டு சமைக்கப்படுகிறது.[8] உலகெங்கிலும் பரவலாக உள்ள பிரட் என்னும் ரொட்டிகளைப் போலவே, ரோட்டி மற்ற உணவுகளில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. ஈரானில், இந்த ரொட்டியில் இரண்டு வகைகள் உள்ளன அவை கபூஸ் (khaboos)[9] மற்றும் லவாஷ் (lavash) என்று அழைக்கப்படுகின்றன, இந்த இரண்டு ரொட்டிகளில் (முன்னது இந்திய ரோட்டியைப் போலவே தயாரிக்கப்படுகிறது) அடுத்தது பிற ரோட்டிகளை மிகவும் ஒத்திருக்கிறது.

இலங்கை

 
சிலோன் / கேரளா பாணியில் ரொட்டி (பரோட்டா) கறியுடன் வைக்கப்பட்டுள்ளது

இலங்கையில், ரோட்டி வகைகளில் மிகவும் பிரபலமான வகை[சான்று தேவை] பாலி ரோடி (தேங்காய் ரோட்டி),[10] இது கோதுமை மாவு, கேழ்வரகு மாவு அல்லது இரண்டின் கலவையைக் கொண்டும், தேங்காய் துருவல். சில நேரங்களில், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம் ஆகியவை சமைக்கும் முன் மாவில் கலந்து சேர்க்கப்படும். இவை பொதுவாக பிற ரோட்டி வகைகளைவிட தடிமனாகவும் கடினமாகவும் இருக்கும். இவை வழக்கமாக கறிகளுடன் அல்லது சம்பல் அல்லது லுனூ மிரிஸ் வகைகளுடன் சாப்பிடுகின்றன, மேலும் இது துணைக்கு ஒன்றை தொட்டுக்கொண்டு உண்ணும் ஒரு முக்கிய உணவாகக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Alan Davidson (21 August 2014). The Oxford Companion to Food. OUP Oxford. pp. 692–. ISBN 978-0-19-104072-6.
  2. Jim Smith (15 April 2008). Technology of Reduced Additive Foods. John Wiley & Sons. pp. 113–. ISBN 978-1-4051-4795-8.
  3. Bruce Kraig; Colleen Taylor Sen (9 September 2013). Street Food Around the World: An Encyclopedia of Food and Culture. ABC-CLIO. pp. 301–. ISBN 978-1-59884-955-4.
  4. Davidson, A.; Jaine, T. (2014). The Oxford Companion to Food. Oxford Companions. OUP Oxford. p. 692. ISBN 978-0-19-104072-6. Retrieved February 9, 2018.
  5. Zahid, Anusha (October 9, 2017). "Sunridge launches into atta". Retrieved February 9, 2018.
  6. "Rotika (रोटिका)". Spoken Sanskrit. Retrieved 25 March 2007.
  7. Wrigley, C.W.; Corke, H.; Seetharaman, K.; Faubion, J. (2015). Encyclopedia of Food Grains. Elsevier Science. p. 19. ISBN 978-0-12-394786-4. Retrieved February 9, 2018. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  8. Gadia, M. (2009). The Indian Vegan Kitchen: More Than 150 Quick and Healthy Homestyle Recipes. Penguin Publishing Group. p. 234. ISBN 978-1-101-14541-8. Retrieved February 9, 2018. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  9. "Khaboos (Iranian Roti) Recipe". Archived from the original on 24 August 2007. Retrieved 15 July 2012.
  10. "Experience true variety of cuisines at Hotel Riu Sri Lanka". October 9, 2017. Retrieved February 9, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்டி&oldid=4284326" இலிருந்து மீள்விக்கப்பட்டது