சராய்கி மொழி

சராய்கி மொழி அல்லது சிராய்கி மொழி (Saraiki) (سرائیکی Sarā'īkī, பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பஞ்சாப் பகுதியின் மக்களால் பேசப்படும் இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும். பாகிஸ்தானில் இம்மொழிக்கு பாரசீகம் மற்றும் அரேபிய எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். சிராய்கி மொழி பேசுவோர், சிராய்கி மொழி பஞ்சாபி மொழியின் வட்டார வழக்கல்ல; தங்களின் சொந்த மொழி என வாதிடுகின்றனர்.[3] 2013-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தெற்கு பகுதி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் தெற்கு பகுதி, சிந்து மாகாணத்தின் வடக்குப் பகுதி, பலுசிஸ்தான் மாகாணத்தின் கிழக்குப் பகுதி மற்றும் இந்தியாவின் மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இருபது மில்லியன் மக்கள் சிராய்கி மொழியை பேசுகின்றனர்.

சராய்கி மொழி
سرائیکی
சராய்கி மொழியின் எழுத்து
நாடு(கள்)பாகிஸ்தான்
பிராந்தியம்முக்கியமாக தெற்கு பஞ்சாப்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியன்  (2013)[1]
பேச்சு வழக்கு
மூல்தானிய மொழி
ரியாசதி வட்டார வழக்கு (ரியாசதி - பகவல்புரி)
தாளி பேச்சு வழக்கு
பெர்சியஅரேபிய எழுத்து முறைகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3skr
மொழிக் குறிப்புsera1259
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
பஞ்சாபில் சராய்கி மொழியில் பேசும் பெண், இந்தியா
தெற்கு பஞ்சாபில் சராய்கி மொழியின் வட்டார வழக்கு மொழிகள் பேசும் பகுதிகள்

சராய்கி மொழியின் வட்டார வழக்கு மொழிகள்

தொகு
சராய்கியின் வட்டார வழக்குகள்:[4]

மத்திய சராய்கி மொழி வழக்கு பாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் மாவட்டம், முசாப்பர்கர் மாவட்டம், லைய்யா மாவட்டம், மூல்தான் மாவட்டம் மற்றும் பகவல்பூர் மாவட்டங்களில் பேசப்படுகிறது. தெற்கு சிராய்கி வழக்கு மொழி ராஜன்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டங்களிலும்; சிந்தி சிராய்கி வழக்கு சிந்து மாகாணம் முழுவதும் பேசப்படுகிறது. வடக்கு சிராய்கி மொழியின் தாளி வழக்கு தேரா இஸ்மாயில் கான் மாவட்டம் மற்றும் மியான்வாலி மாவட்டங்களில் பேசப்படுகிறது. கிழக்கு சிராய்கி மொழி பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளில் பேசப்படுகிறது.

பாகிஸ்தானில் சிராய்கி மொழி

தொகு

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு சிந்து மாகாணம், தெற்கு பஞ்சாப் மாகாணம் கிழக்கு பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் தெற்கு வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களில் இருபது மில்லியன் மக்கள் சிராய்கி மொழியை பேசுகின்றனர்.

இந்தியாவில் சிராய்கி மொழி

தொகு

2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சிராய்கி மொழி பேசுவோரி எண்ணிக்கை 68,000 ஆக உள்ளது. இந்தியப் பிரிவினையின் போது, பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் மற்றும் சிந்து மாகாணங்களிலிருந்து இந்தியாவின் கர்னால், பரிதாபாத், பல்லாப்கர், பால்வல், ரேவாரி, சிர்சா, பதேபாத், ஹிஸ்சர், பிவானி, பானிபட், தில்லி, கங்கா நகர் போன்ற வட இந்திய நகரங்களில் அகதிகளாக குடியேறியவர்களில் பலர் சிராய்கி மொழியைப் பேசுகின்றனர்.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Lewis, Simons & Fennig 2016.
  2. "Western Panjabi". Ethnologue. பார்க்கப்பட்ட நாள் 21 July 2016.
  3. Rahman 1995, ப. 16: "the Punjabis claim that Siraiki is a dialect of Punjabi, whereas the Siraikis call it a language in its own right."; Shackle 2014a: "it has come to be increasingly recognized internationally as a language in its own right, although this claim continues to be disputed by many Punjabi speakers who regard it as a dialect of Punjabi"; Lewis, Simons & Fennig 2016: " Until recently it was considered a dialect of Panjabi."; (Masica 1991, ப. 443) defines Saraiki as a "new literary language"; see also (Shackle 2003, ப. 585–86)
  4. This is the grouping in (Wagha 1997, ப. 229–31), which laregely coincides with that in (Shackle 1976, ப. 5–8).

வெளி இணைப்புகள்

தொகு

ஆதார நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்கி_மொழி&oldid=3583462" இலிருந்து மீள்விக்கப்பட்டது