சீரகம்
சீரகம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் Angiosperms |
தரப்படுத்தப்படாத: | மெய்யிருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Apiales |
குடும்பம்: | அபியேசியே |
பேரினம்: | சீரகி |
இனம்: | C. cyminum |
இருசொற் பெயரீடு | |
Cuminum cyminum லி.[1] |
சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீர்+அகம்=சீரகம்தொகு
சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
மருத்துவ குணங்கள்தொகு
இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.
ஊட்டப்பொருட்கள்தொகு
ஊட்டப்பொருள்தொகு
ஊட்ட மதிப்பீடு - 100 g | |
---|---|
ஆற்றல் | 1,567 kJ (375 kcal) |
44.24 g | |
சீனி | 2.25 g |
நார்ப்பொருள் | 10.5 g |
22.27 g | |
நிறைவுற்றது | 1.535 g |
ஒற்றைநிறைவுறாதது | 14.04 g |
பல்நிறைவுறாதது | 3.279 g |
புரதம் | 17.81 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | (8%) 64 μg(7%) 762 μg |
உயிர்ச்சத்து ஏ | 1270 IU |
தயமின் (B1) | (55%) 0.628 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (27%) 0.327 mg |
நியாசின் (B3) | (31%) 4.579 mg |
உயிர்ச்சத்து பி6 | (33%) 0.435 mg |
இலைக்காடி (B9) | (3%) 10 μg |
உயிர்ச்சத்து பி12 | (0%) 0 μg |
கோலின் | (5%) 24.7 mg |
உயிர்ச்சத்து சி | (9%) 7.7 mg |
உயிர்ச்சத்து டி | (0%) 0 μg |
உயிர்ச்சத்து டி | (0%) 0 IU |
உயிர்ச்சத்து ஈ | (22%) 3.33 mg |
உயிர்ச்சத்து கே | (5%) 5.4 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (93%) 931 mg |
இரும்பு | (510%) 66.36 mg |
மக்னீசியம் | (262%) 931 mg |
மாங்கனீசு | (159%) 3.333 mg |
பாசுபரசு | (71%) 499 mg |
பொட்டாசியம் | (38%) 1788 mg |
சோடியம் | (11%) 168 mg |
துத்தநாகம் | (51%) 4.8 mg |
Other constituents | |
நீர் | 8.06 g |
Reference [2] | |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன.
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறதுதொகு
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது.
சித்தர் பாடல்தொகு
- எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
- கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
- விட்டுப்போகுமே
- விடாவிடில் நான் தேரனும் அல்லவே
என சித்தர் பாடல் ஒலிக்கிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Cuminum cyminum information from NPGS/GRIN". www.ars-grin.gov. 2009-01-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-03-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ United States Department of Agriculture. "Cumin Seed". Agricultural Research Service USDA. டிசம்பர் 20, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 4, 2015 அன்று பார்க்கப்பட்டது.