பசி நாராயணன்
நாராயணன், (பசி நாராயணன்) என்பவர் இந்திய மேடை நாடக, திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக கவுண்டமணியுடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். நாராயணன் 500 க்கும் மேற்பட்ட தமிழ் மொழிப் படங்களில் நடித்தார். இவர் கவுண்டமணியிடம் "போன் ஒயரு பிஞ்சி ஒரு வருசம் ஆச்சி..." என்ற வசனத்திற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.[1]
பசி நாராயணன் | |
---|---|
பிறப்பு | நாராயணன் தமிழ்நாடு, சிவகாசி |
இறப்பு | 1998 உடுமலை |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1967-1998 |
வாழ்க்கைத் துணை | வள்ளி |
பிள்ளைகள் | 3 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுநாராயணன் தமிழ்நாட்டின் சிவகாசி மாவட்டத்தில் பிறந்தார். இவர் 15 வயதில் நடிக்கத் தொடங்கினார்.[2][3]
தொழில்
தொகுபின்னர் 1955 ஆம் ஆண்டில் மனோகர் நிறுவனத்தில் பல நாடகங்களில் நடித்தார். இதன் பிறகு திரைப்படத் துறையில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் 1960 களில் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார். என்றாலும் பசி படத்தில் நடித்தபிறகே பிரபலமானார். இதன் பிறகு இவர் 'பசி' நாராயணன் என்ற பெயரில் திரை உலகில் புகழ் பெற்றார். நடிப்பு மட்டுமல்லாமல், கதை சொல்லல், எழுதுதல், நடனம் போன்றவற்றிலும் திறமை கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த பிரபல தமிழ்த் திரைப்படமான ' ஆயிரதில் ஓருவன் ' படத்தில் நடித்துள்ளார். அடுத்தத் தலைமுறை முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாண்டியராஜன், கார்த்திக், சரத்குமார் போன்றோரின் பல படங்களிலும் பசி நாராயணன் நடித்துள்ளார்.
குடும்பம்
தொகுஇவரது மனைவி பெயர் வள்ளி, இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மகனின் பெயர் மாரியப்பன், இரண்டாவது மகளின் பெயர் ரேவதி, மூன்றாவது மகளின் பெயர் கானா ஜோதி.[2]
இறப்பு
தொகு1998 இல், இவர் இதய செயலிழப்பால் இறந்தார். அவரது கடைசி படம் நினைத்தேன் வந்தாய்.[2]
திரைப்படப் பங்களிப்புகள்
தொகு1960 கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1967 | இரு மலர்கள் | சுற்றுலா வழிகாட்டி | |
1967 | ராஜா வீட்டுப் பிள்ளை | ||
1968 | குடியிருந்த கோயில் |
1970 கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1972 | மப்பிள்ளை அழைப்பு | ||
1974 | அக்கரை பச்சை | ||
1974 | சிசுபலன் | ||
1974 | சிரித்து வாழ வேண்டும் | ||
1979 | பசி | சவுண்ட் கண்ணையா |
1980 கள்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1981 | ஆணிவேர் | ||
1981 | பட்டம் பறக்கட்டும் | ||
1982 | பொய் சாட்சி | ||
1982 | முள் இல்லாத ரோஜா | ||
1983 | தங்கைக்கோர் கீதம் | ||
1983 | ஆனந்த கும்மி | ||
1984 | நான் மகான் அல்ல | ||
1985 | மண்ணுக்கேத்த பொண்ணு | ||
1985 | சுகமான ராகங்கள் | ||
1985 | கன்னிராசி | ||
1985 | இதய கோவில் | ||
1985 | பிள்ளைநிலா | ||
1985 | ஆண்பாவம் | ||
1985 | குங்குமச்சிமிழ் | ||
1985 | எங்கள் குரால் | ||
1986 | நம்ம ஊரு நல்ல ஊரு | ||
1986 | ஓரு இனிய உதயம் | ||
1986 | தழுவாத கைகள் | ||
1987 | வலையல் சத்தம் | ||
1987 | மனைவி ரெடி | தமிழ் ஆசிரியர் | |
1987 | மன்னுக்குள் வைரம் | ||
1987 | நினைவே ஒரு சங்கீதம் | ||
1987 | சங்கர் குரு | ||
1988 | என் தங்கை கல்யாணி | ||
1988 | செந்தூரப்பூவே | ||
1988 | என் தங்கச்சி படிச்சவ | ||
1988 | ஒருவர் வாழும் ஆலயம் | ||
1989 | சிவா |
1990 கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Akilan, Mayura (2016-08-03). "போன் வயரு பிஞ்சு ஒரு வாரமாச்சு.. இதுதான் பசி நாராயணன்!". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ 2.0 2.1 2.2 Akilan, Mayura (2016-07-25). "மறைந்த நடிகர் பசி நாராயணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி- ஜெ., அறிவிப்பு". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.
- ↑ ""Pasi" Narayanan". Antru Kanda Mugam (in ஆங்கிலம்). 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2020-01-20.