முள் இல்லாத ரோஜா
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
முள் இல்லாத ரோஜா என்பது இயக்குநர் கே. ராம்ராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சக்கரவர்த்தி, விஜயகலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் முரளிராஜ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1982.
முள் இல்லாத ரோஜா | |
---|---|
இயக்கம் | கே. ராம்ராஜ் |
தயாரிப்பு | ஜோதி பாரதி |
இசை | முரளிராஜ் |
நடிப்பு | சக்கரவர்த்தி விஜயகலா டெல்லி கணேஷ் கவுண்டமணி குமரிமுத்து பசி நாராயணன் ராஜ்கிருஷ்ணன் காந்திமதி தேங்காய் சீனிவாசன் உஷா |
ஒளிப்பதிவு | டி. ஆர். நடராஜன் |
படத்தொகுப்பு | பி. ஆர். ராமகிருஷ்ணா |
வெளியீடு | அக்டோபர் 15, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
தொகுகதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்தில் பெண்பித்தராக ஒரு பண்ணையார் , பல பெண்களுக்குத் தீங்கு செய்கிறார். ஊரில் இருக்கும் அப்பாவியான ஒரு இளைஞனுக்கும் ஒரு வெகுளிப் பெண்ணுக்கும் உள்ள நட்பு அந்த பண்ணையாரைப் பொறாமைப்பட வைக்கிறது. அவரால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அவரின் அட்டூழியங்கள் ஒழிந்தது எப்படி என்று செல்லும் திரைப்படம்.