பெரியதம்பி
சித்ரா லட்சுமணன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பெரியதம்பி (Periya Thambi) 1997 ஆவது ஆண்டில் சித்ரா லெட்சுமணன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, நக்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்ரா லெட்சுமணன், சித்ரா ராமு ஆகியோர் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1997 சனவரி 14 அன்று வெளியானது.[1][2]
பெரியதம்பி | |
---|---|
இயக்கம் | சித்ரா லெட்சுமணன் |
தயாரிப்பு | சித்ரா லெட்சுமணன் சித்ரா ராமு |
கதை | அபிராம மூர்த்தி (வசனம்) |
திரைக்கதை | சித்ரா லெட்சுமணன் |
இசை | தேவா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இளவரசு |
படத்தொகுப்பு | என். சந்திரன் |
கலையகம் | காயத்ரி பிலிம்சு |
விநியோகம் | காயத்ரி பிலிம்சு |
வெளியீடு | 14 சனவரி 1997 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- பிரபு - சிவா
- நக்மா - செல்வி
- கவுண்டமணி - அழகுசுந்தரம்
- விஜயகுமார் - சங்கரபாண்டியன்
- சந்திரசேகர் - முத்து
- தலைவாசல் விஜய் - சுந்தரபாண்டியன், சிவாவின் தந்தை
- உதய் பிரகாஷ் - தங்கராசு
- பொன்வண்ணன் - இரத்னம்
- வடிவுக்கரசி - காமாட்சி, செல்வியின் தாய்
- சங்கீதா - சிவகாமி
- ருத்ரா - மீனா, சங்கரபாண்டியனின் மகள்
- சுவர்ணா மேத்யு - கண்ணம்மா
- சித்ரா லட்சுமணன்
- கே. கே. சௌந்தர் - முத்துவின் தந்தை
- குள்ளமணி
- பெரிய கருப்பு தேவர்
- ஜெயா மணி
- மகாநதி தினேஷ்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[3]
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
"ஆவாரம்பூவு" | கிருஷ்ணராஜ் | 5:22 |
"லெஃப்ட் ரைட்டு" | சுவர்ணலதா | 4:13 |
"பூவுக்கு ஒரு கல்யாணம்" | மலேசியா வாசுதேவன், மனோ, சுவர்ணலதா | 5:17 |
"தாஜ் மஹாலே" | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் | 5:12 |
"வெள்ளிக்கிழமை" | சுவர்ணலதா | 5:09 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Filmography of periya thambi". cinesouth.com. Archived from the original on 2006-10-29. Retrieved 2013-09-17.
- ↑ "Periya Thambi (1997) Tamil Movie". spicyonion.com. Retrieved 2015-09-17.
- ↑ "Periya Thambi". சுபாட்டிபை. Archived from the original on 3 சனவரி 2020. Retrieved 31 May 2023.