பெரிய கவுண்டர் பொண்ணு

மணிவாசகம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெரியகவுண்டர் பொண்ணு (Periya Gounder Ponnu) 1992 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை மணிவாசகம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார் மற்றும் கௌதமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் இணைந்து மனோரமா, கவுண்டமணி, செந்தில்l, ஜெய்கணேஷ், வடிவுக்கரசி, டெல்லி கணேஷ் மற்ரும் விஜயராஜ் போன்றோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜேஸ்வரி மணிவாசகம் மற்றும் பி. எஸ். மணி ஆகிய இருவரும் இணைந்து ராஜ புஷ்பா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். 1992 ஆம் ஆண்டு பிப்ரவர் 28 அன்று வெளிவந்தது. பொதுவாக இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.[1]

பெரிய கவுண்டர் பொண்ணு
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
பி. எஸ். மணி
கதைமணிவாசகம்
ஈரோடு சௌந்தர் (வசனம்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ஹெச். அசோக்
படத்தொகுப்புஎல்.கேசவன்
கலையகம்ராஜ புஷ்பா பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 28, 1992 (1992-02-28)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை சுருக்கம் தொகு

பெரிய கவுண்டர் என்று ஊர் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பெரியசாமி (ஜெய்கணேஷ்), அந்தக் கிராமத் தலைவராக உள்ளார். அவர் ஒரு பணக்காரர் ஆவார். அவ்வூரில் அவர் மிகுந்த மரியாதைக்குரிய மனிதருமாகவும் உள்ளார். அவரது மகள் மஞ்சுளா (கௌதமி) நகரத்தில் படித்து வருகிறார். தான் படித்தவர் என்பதாலும் செல்வந்தரின் மகள் என்பதாலும் மிகுந்த கர்வம் பிடித்த பெண்ணாக உள்ளார். ஒரு கோடை விடுமுறையை குடும்பத்துடன் களிக்க மீண்டும் தனது கிராமத்திற்கு வருகிறார். மஞ்சுளாவின் உறவினரான தங்கமுத்து (சரத்குமார்) நன்கு படித்தவர். அவரது விதவைத் தாயாருடன் (மனோரமாவுடன்) அக்கிராமத்தில் சொந்தத் தொழில் செய்து வசித்து வருகிறார். அந்தக் கிராம வழக்கப்படி தங்கமுத்து மஞ்சுளாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் வருங்கால கணவர் ஆவார். ஆனால் மஞ்சுளாவின் தந்தை பெரிய கவுண்டர் என்கிற பெரியசாமி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தங்கமுத்துவை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பவில்லை. எனவே அவர் தங்கமுத்து மற்றும் மஞ்சுளாவின் திருமணத்தை மறுத்து அதை தடுக்க நினைத்து பல வழிகளில் முயல்கிறார்.

இந்நிலையில் பெரியசாமி கிராமத்தில் வசிக்கும் பெல்லி ஜில்லு (ஜில்லு) என்ற பெண்ணிடம் சேர்ந்து பழகி வருகிறார். அவள் அவருடைய ரகசிய தோழியாக இருக்கிறாள். அவர் தனது மகள் மஞ்சுளாவை தனது காதலியின் சகோதரரான அடாவடியில் ஈடுபட்டு வரும் (விஜயராஜ்) என்பவருக்கு திருமணம் செய்து கொள்ள ஜில்லுவிடம் ஒப்புக் கொள்கிறார். இந்நிலையில் ஒரு நாள், தங்கமுத்து மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் மஞ்சுளா அவமதித்து விடுகிறார். இதனால் கோபமடைந்த தங்கமுத்து ஒரு தாலியை மஞ்சுளாவின் கழுத்தில் கட்டுவிடுகிறார். இதைக் கண்டு மஞ்சுளா அதிர்ச்சியடைகிறார். பின்னர் பெரிய கவுண்டர் இத்திருமணத்தை ஏற்றுக்கொண்டாரா? என்பதும் விஜயராஜ் இதை எவ்வாறு எதிர்கொண்டார்? என்பதும் என்பது மீதிக்கதை ஆகும்

நடிகர்கள் தொகு

தங்கமுத்துவாக சரத்குமார்
மஞ்சுளாவாக கௌதமி
தங்கமுத்துவின் தாயாக மனோரமா
பழனிசாமியாக கவுண்டமணி
செந்தில்
பெரியசாமி என்கிற பெரிய கவுண்டராக ஜெய்கணேஷ்
தெய்வாத்தாவாக வடிவுக்கரசி
தங்கமுத்துவின் தந்தையாக டெல்லி கணேஷ்
விஜயராஜ்
பசி நாராயாணன்
கறுப்பு சுப்பையா
செஞ்சி கிருஷ்ணன்
திடீர் கண்ணையா
காந்தாமணியாக சாமிலி
ஜில்லுவாக ஜில்லு
உமாஸ்ரீ

ஒலிப்பதிவு தொகு

பெரிய கவுண்டர் பொண்ணு
ஒலிச்சுவடு
வெளியீடு1992
ஒலிப்பதிவு1992
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்22:10
இசைத் தயாரிப்பாளர்தேவா

இத்திரைப்படத்திற்கு இசை மற்றும் ஒலிப்பதிவினை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டுள்ளார். 5 பாடல்கள் கொண்ட இப்படத்தின் இசை 1992 இல் வெளியானது. இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் காளிதாசன் என்பவர் எழுதியுள்ளார்.[2][3]

வரிசை பாடல் பாடியோர் கால அளவு
1 "சும்மா சும்மா" மனோ 4:16
2 "கொட்டாம்பட்டி" மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா (பின்னணிப் பாடகி) 4:39
3 "சிக்கு முக்கு" எஸ். ஜானகி 4:23
4 "நாலு வார்த்த" கிருஷ்ண ராஜ் 4:42
5 "ஊமைக் குயில் ஒண்ணு" மலேசியா வாசுதேவன், சுந்தர் 4:10

வரவேற்பு தொகு

"த இந்தியன் எக்ஸ்பிரஸ்" இவ்வறு தனது விமர்சனத்தில் "இந்தத் திரைப்படத்தில் நம்ப முடியாத பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் இருந்தபோதிலும், இயக்குனர் மணிவாசகம் இப்படத்தை தனது திரைக்கதையால் நல்ல முறையில் கொண்டு செல்கிறார். ஏனென்றால் இப்படத்தில் பலரும் நன்கு நடித்திருந்தனர்" என்று எழுதுகிறது. "[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Periya Kaunder Ponnu (1992) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  2. "Periya+Goundar+Ponnu+(1992)". mio.to. Archived from the original on 2016-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  3. "Periya Goundar Ponnu songs". saavn.com. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
  4. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920403&printsec=frontpage&hl=en
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கவுண்டர்_பொண்ணு&oldid=3710340" இலிருந்து மீள்விக்கப்பட்டது