ராஜீவ்

திரைப்பட நடிகர்

ராஜீவ் (Rajeev) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் கவனம் செலுத்துகிறார். 1982 ஆம் ஆண்டு வெளியான முள் இல்லாத ரோஜாவில் நாயகனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் எதிர்மறை, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் மலையாள திரைப்படமான உஸ்தாத், எஃப். ஐ. ஆர், சத்யம், கலெக்டர் ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜீவ்
பிறப்புராஜசேகர்
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ராஜீவ்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1981-2011
பெற்றோர்பாலசுப்பிரமணிய முதலியார், ராஜேஸ்வரி அம்மாள்
வாழ்க்கைத்
துணை
ராணி
பிள்ளைகள்மீனா காமாட்சி, கிரண் சூர்யா

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ராஜீவ் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை பாலசுப்பிரமணிய முதலியார் பெங்களூரு -560016 இல் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள். பெங்களூரு -560016 இல் ஐ. டி. ஐ வித்யா மந்தீர் பள்ளியில் ராஜீவ் படித்தார்.[1] இவரது பெற்றோரின் இறப்புக்குப் பிறகும், ராஜீவ் திருமணத்தில் விருப்பமின்றி இருந்தார். ஆனால் இவரது சகோதரர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். ராணி என்பவரை மணந்த இவருக்கு மீனா காமாட்சி என்ற மகளும், கிரண் சூர்யா என்ற மகனும் உள்ளனர்.[2]

தொழில்

தொகு

ராஜீவ் திரைப்படங்களில் நடிக்க கலைக்காணலுக்கு விண்ணப்பித்தார். கலைக்காணலின் போது இவர் நிறைய போராட்டங்களையும் நிராகரிப்பையும் எதிர்கொண்டார். வாய்ப்புகள் இல்லாததால், தாஜ் கோரமண்டல் விடுதியில் பணியாளராக பணியாற்றினார். விடுதியில் நடந்த போட்டியில் நடனமாடியதற்காக இவருக்கு முதல் பரிசு கிடைத்தது; இவரது நண்பர்கள் மீண்டும் படங்களில் நடிக்க முயற்சிக்கும்படி இவரை வற்புறுத்தினர்.[3]

ராஜீவ் தனது வகுப்பு தோழர், தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்தார். ராஜீவைப் பார்த்த மலையாள நடிகர் ரவீந்திரன், ஒரு தலை ராகம் படத்தில் தனக்கு பின்னணி குரல் கொடுக்கச் சொன்னார். ராஜீவ் இந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அந்த படத்தின் இயக்குனர் டி. ராஜேந்தர், ராஜீவை பின்னணி குரல் கலைஞராக தேர்ந்தெடுத்தார். இவர் மீண்டும் வசந்த அழைப்பகளில் ரவீந்திரனுக்காக பின்னணி குரல் கொடுத்தார் . டி. ராஜேந்தர் இரயில் பயணங்களில் படத்தில் இவருக்கு ஒரு கொடுமைக்கார கணவன் பாத்திரத்தின் வழியாக இவருக்கு வாய்ப்பை வழங்கினார். பின்னர் இவர் பாலைவனச்சோலையில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.[4]

மேலும் இவர் கே பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் கன்னட மறு ஆக்கமான பெங்கியல்லி அரலித ஹுவ்வு படத்தில் குடிகார அண்ணனாக நடித்தார்.

திரைப்படவியல்

தொகு

இவரது படங்களில் பின்வருவன அடங்கும்:[5]

நடிகராக

தொகு

தமிழ்

தொகு

மலையாளம்

தொகு
 • கலெக்டர் (2011)
 • உதயம் (2004)
 • சத்யம் (2004)
 • ரிலாக்ஸ் (2004)
 • எப். ஐ. ஆர் (1999)
 • உஸ்தாத் (1999)
 • எலவம்கோடு தேசம் (1998)

கன்னடம்

தொகு
 • பெங்கியல்லி அரலித ஹூவு (1983)
 • லட்சுமி கட்டாட்சா (1985)
 • வஜ்ரமுஷ்டி (1985)
 • யுத்த கண்டா (1989)
 • கொல்லூர் கலா (1991)
 • கண்டுகலி (1994)
 • ஜனுமதா ஜோடி (1996)
 • நம்மூரா உடுகா (1998)
 • தேவதே

தெலுங்கு

தொகு
 • கோகிலம்மா (1983)
 • நா அல்லுடு (2005)
 • கூண்டா (1984)

பின்னணி குரல் கலைஞராக

தொகு

குறிப்புகள்

தொகு
 1. https://web.archive.org/web/20140920232157/http://cinema.maalaimalar.com/2014/09/12221802/Acting-trained-character-actor.html
 2. https://web.archive.org/web/20140920232419/http://cinema.maalaimalar.com/2014/09/14224714/Tamil-actor-Rajiv-record-in-ot.html
 3. http://cinema.maalaimalar.com/2014/03/22222729/Cinema-history-rajiv-worked-in.html
 4. https://web.archive.org/web/20140920232207/http://cinema.maalaimalar.com/2014/09/13221344/rajiv-reach-good-place-towards.html
 5. "Other movies by Rajiv". jointscene.com. 5 October 2011. Archived from the original on 29 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்&oldid=3180619" இலிருந்து மீள்விக்கப்பட்டது