ரெட் (2002 திரைப்படம்)
சிங்கம்புலி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ரெட் (Red) (மொ.பெ. சிவப்பு) 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக பிரியா கில்லும் நடித்துள்ளனர். சிங்கம்புலி இயக்கிய இந்தத் திரைபடத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
ரெட் | |
---|---|
இயக்கம் | சிங்கம்புலி |
தயாரிப்பு | நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்ரவர்த்தி |
இசை | தேவா |
நடிப்பு | அஜித் குமார் பிரியா கில் சலிம் கெளவுஸ் மணிவண்ணன் ரகுவரன் ராஜேஷ் ரேவதி |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
வெளியீடு | ஜனவரி 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
அஜித் குமார் | ரெட் |
பிரியா கில் | காயத்ரி |
மணிவண்ணன் | சுண்டல் நாராயணன் |
ராஜேஷ் | மணி மேகலை |
சலிம் கெளவுஸ் | செல்லூர் சீனி |
'நிழல்கள்' ரவி | ஆனந்தன் |
பாடல்கள்
தொகுஆறு பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார். தாய் மடியே என்னும் பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பான வெற்றியைப் பெற்ற பாடல்களாகும்.[1] இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார்.
எண் | பாடல் | பாடியவர் |
---|---|---|
1 | ரெட் ரெட் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
2 | ஒல்லிக்குச்சி உடம்புக்காரி | கே. கே, அனுராதா ஸ்ரீராம் |
3 | தில் தில் இத்தாலி | சிலம்பரசன், மாதங்கி, சிவகுமார் |
4 | ரோஜாக்காடு சுடிதார் போட்டு | ஹரிஹரன் |
5 | தாய் மடியே | திப்பு |
6 | நவம்பர் மாதம் | ஹரிஹரன், மகாலட்சுமி ஐயர் |