சின்னமுத்து (திரைப்படம்)

1994 திரைப்படம்
(சின்ன முத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்ன முத்து (Chinna Muthu) என்பது 1994 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். சண்முக சுந்தரம் இயக்கிய. இப்படத்தில் ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்க, ராஜீவ், ஒய். ஜி. மகேந்திரன், வைஷ்ணவி, சந்திரசேகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

சின்ன முத்து
இயக்கம்சண்முக சுந்தரம்
தயாரிப்புராதாரவி
பாக்யலட்சுமி ராதா ரவி
கதைசண்முக சுந்தரம்
இசைதேவா
நடிப்புராதா ரவி
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்பி. ஆர். ஆர். ஆர்ட் எண்டர்பிரைசஸ்
வெளியீடுபெப்ரவரி 19, 1994 (1994-02-19)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

முன்னதாக அண்ணாமலை (1992) படத்திற்கான உரையாடல் எழுத்தாளராக பணியாற்றிய சண்முக சுந்தரம் இப்படத்த்தை இயக்கியுள்ளார். ராதாரவி முதன்மை வேடத்தில் நடித்தார், இது அவரின் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்த மூன்றாவது படம் ஆகும்.[2]

ஒலிப்பதிவு தொகு

படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார்.[3][4]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 சின்ன முத்து (பெண்) ஜிக்கி வைரமுத்து 02:26
2 சின்ன முத்து (ஆண்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 02:25
3 சின்ன முத்து (இரக்கம்) எஸ்.பி.பாலசுப்ரமண்யம் 01:14
4 இதழ் ஓரம் சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமண்யம் 03:26
5 பறந்தாடி எஸ். பி. பாலசுப்ரமண்யம் 05:00
6 சூதான மனசு சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமண்யம் 04:43
7 வடுகப்பட்டிகு வலதுபக்கம் கே.எஸ் சித்ரா, கங்கை அமரன் 05:02
8 வலது கலை சுவர்ணலதா, மலேசியா வாசுதேவன் 04:16

வெளியீடும், வரவேற்பும் தொகு

சின்ன முத்து 19 பிப்ரவரி 1994 இல் வெளியிடப்பட்டது. ராதா ரவியின் நடிப்பை "அவரின் நடிப்பு மிகை நடிப்பாக இருந்தது" என்றும், அவரது "முந்தைய தயாரிப்புகள் மிகச் சிறந்த முயற்சிகள்" என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்மறையான விமர்சனத்தை அளித்தது.

குறிப்புகள் தொகு