எங்க வீட்டு வேலன்

டி. ராஜேந்தர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எங்க வீட்டு வேலன் (Enga Veetu Velan) என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். டி. ராஜேந்தர் இயக்கி தயாரித்த இப்படத்தில் முக்கிய வேடங்களில் ராஜீவ் மற்றும் ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படமானது 10 ஏப்ரல் 1992 இல் வெளியிடப்பட்டது. படம் 100 நாளைக் கடந்து ஓடியது.[1][2]

எங்க வீட்டு வேலன்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புராஜீவ்
ரேகா
சிலம்பரசன்
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புபி. ஆர். சண்முகம்
கலையகம்சிம்பு சினி ஆர்ட்ஸ்
வெளியீடு10 ஏப்ரல் 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருண் (ராஜீவ்) கல்யாணி (ரேகா) என்பவரை மணந்தவர். ஆனால் பாப்பு (ஷர்மிலி) என்பவருடன் தனியாக ஒரு தொடர்பு வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அருண் கல்யாணியையும் அவர்களது மகனான வேலனையும் (சிலம்பரசன்) ஒதுக்கி வைக்கிறார். வேலன் தனக்கு பிறந்தான் இல்லை என்று அருண் இழிவுபடுத்துகிறார். இதன் பிறகு அருண் பாப்புவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். பாப்பு பணத்தாசைப் பிடித்தவள். பல ஆண்களுடன் உறவு வைத்திருக்கிறாள். கல்யாணி வேலனுடன் தனியாக தங்கியிருக்கிறாள். ஆனால் அருணின் வீட்டில் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாக உள்ளாள். வேலன் தனது பெற்றோரை ஒன்றாக்க தந்திரங்களை செய்ய முடிவு செய்கிறான். அதன் ஒரு பகுதியாக பாப்பு மற்றும் அவரது குடும்பத்தினரின் உண்மையான முகத்தை அருணுக்கு காட்ட திட்டமிடுகிறான்.

வேலன் தந்திரோபாயமாகத் திட்டமிடுகிறான். பாப்புவும் அவளுடைய குடும்பத்தினரும் தனக்கு தெரியாமல் தன் பணத்தை திருடுகிறார்கள் என்பதை அருண் அறிந்துகொள்கிறார், இது அவரை கோபப்படுத்துகிறது. பாப்பு அருணின் வீட்டை விட்டு ஓட முடிவுசெய்து, ஜம்பு (தளபதி தினேஷ்) என்றொரு நபருடன் வாழ முடிவு செய்கிறாள். இதை அறிந்த அருண் தனக்கு துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறார். கோபத்தில் பாப்புவைக் கொல்ல முடிவு செய்கிறார். வேலன் ரகசியமாக அருனுடன் அவரது மகிழுந்தில் பயணம் செய்கிறான். அருண் ஒரு விடுதியில் பாப்புவையும் ஜம்புவையும் கண்டுபிடிக்கிறார். அப்போது அவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது, அந்த நேரத்தில் ஜம்பு சுட்டுக் கொல்லப்படுகிறான். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அருணை காவல் துறையினர் கைது செய்கிறார்கள். வேலனை நேரில் கண்ட சாட்சியாக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லகின்றனர்.

ஜம்பு அருணால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வேலன் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறான். ஆனால் அருண் அதை மறுக்கிறார். உண்மையைக் கூறுமாறு வேலனிடம் அருண் கெஞ்சி தன் தவறை உணர்ந்ததாக கூறுகிறார். வேலன் தனக்கு பிறந்தவன்தான் என்பதை அருண் அனைவருக்கும் தெரிவிக்கிறார். இதன் பிறகு வேலன் நீதிமன்றத்தில் உண்மையைத் தெரிவிக்கிறான். பாப்புவின் சகோதரனாக நடக்கும் செல்வாவால் ஜம்பு கொல்லப்பட்டதாகவும், அக்குற்றம் குற்றம் அருண் மீது சுமத்தப்பட்டதாகவும் வேலன் தெரிவிக்கிறான். பாபுவின் குடும்பத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அருண் விடுவிக்கப்படுகிறார். அருண் திருந்தி வேலனையும், கல்யாணியையும் ஏற்றுக்கொள்கிறார்.

நடிகர்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_வீட்டு_வேலன்&oldid=3659577" இலிருந்து மீள்விக்கப்பட்டது