கொண்டாட்டம்
கொண்டாட்டம் (Kondattam) என்பது 1998 ஆம் ஆண்டைய இந்திய தமிழ் குடும்ப நாடகத் திரைப்படம் ஆகும். இதை கே. எஸ். ரவிக்குமார் இயக்க, அர்ஜுன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [1] இந்த படம் சராசரியான வெற்றியைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ராகுமாருடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. [2]
கொண்டாட்டம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | பி. சம்பசிவ ரெட்டி, கே. ஜெயராமன் |
கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | மரகதமணி |
நடிப்பு | அர்ஜுன் சிம்ரன் மந்த்ரா |
ஒளிப்பதிவு | கே. பிரசாந்த் |
படத்தொகுப்பு | கே. தணிகாச்சலம் |
கலையகம் | சிறீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | 6 பெப்ரவரி 1998 |
ஓட்டம் | 158 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை தொகு
ராஜா ( அர்ஜுன் ) ஒரு பணக்கார, குறும்புக்கார, அன்பான இளைஞன். அவனது நண்பர்கள் ( ஆனந்த் பாபு, சின்னி ஜெயந்த், ஆனந்த் ) ஆகியோர் படகு சவாரி சென்றபோது விபத்தில் இறந்ததால் துக்கம் அடைகிறான். இவனது காதலியான லலிதா ( சிம்ரன் ) அவனது நண்பர்களின் மரணத்திற்கு இவனே பொறுப்பு என்று குற்றம் சாட்டுகிறாள். இதனால் ராஜா மனம் உடைந்து போகிறான். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ராஜா, இறந்த தனது நண்பர்களின் குடும்பங்களுக்கு தனது சொத்துக்களை எழுதுகிறான். ஆனந்தின் மனைவி ( சாரதா பிரீதா ) ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இறந்துவிட்டார் என்று இவனுக்கு தகவல் வருகிறது.
ராஜா ஆனந்தின் குடும்பத்தினருடனும், குழந்தையையுடனும் கொஞ்ச காலம் தங்க வேண்டும் என்று விரும்புகிறான். வீட்டில் உள்ள வயதான தம்பதியரைத் தவிர ( ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி ), மற்ற உறுப்பினர்கள் ஆரம்பத்தில் இவன் தங்கி இருப்பதை விரும்பவில்லை. ஆனால் நாளடைவில் அவர்களின் அன்பையும் பாசத்தையும் வெல்கிறான். இதற்கிடையில் குழந்தையைக் கொல்ல யாரோ முயற்சிக்கிறார்கள் என்பதை ராஜா கண்டுபிடிக்கிறான். பின்னர் இவன் வீட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்து மர்மத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபடுகிறான்.
திருமண நிச்சயதார்த்தம் ஆன லலிதா அதே வீட்டில் தங்க வந்து ராஜாவை இன்னும் வெறுத்தபடியே இருக்கிறாள். குழந்தையின் பெயர்சூட்டும் விழாவின் போது, ராஜாதான் ஆனந்தின் மரணத்துக்குக் காரணம் என்று குடும்பத்தினருக்குத் தெரியவருகிறது. ஆனந்தின் சொத்துக்கு குழந்தையே வாரிசாக இருக்கும் என்பதை அர்ஜுனின் வேலைக்காரன் ( டெல்லி கணேஷ் ) வெளிப்படுத்துகிறார். அவர்களது மகிழுந்து ஓட்டுநர் பழனியால் ( ரமேஷ் கண்ணா ) ராஜா தாக்கப்பட்டபோது, தற்செயலாக பழனியின் மோதிரத்தைப் பார்த்த ராஜா, குழந்தையை கொல்ல முயன்றவர் அவர்தான் என்பதை உணர்கிறான்.
பழனி புருஷோத்தமனின் மகளை (லாவண்யா) காதலித்து, அந்த சொத்தின் மீது ஒரு கண் வைத்திருந்தார். அவர்தான் சொத்தின் வாரிசான குழந்தையைக் கொல்ல முயன்றவர் என்பதை அறிந்த பிறகு. இறுதியில், ராஜா லலிதாவை மணந்து பெரிய குடும்பத்தின் ஒரு நபராக மாறுகிறார்.
நடிகர்கள் தொகு
- ராஜா அல்லது ராமுவாக அர்ஜுன்
- லலிதாவாக சிம்ரன்
- வித்யாவாக மந்தரா
- ஆனந்தின் தாத்தாவாகஜெமினி கணேசன்
- புருசோத்தமனாக விஜயகுமார்
- ராஜரத்தினமாக ஜெய்கணேஷ்
- பழனியாக ரமேஷ் கண்ணா
- பாஸ்கரனாக ஆர். சுந்தர்ராஜன்
- ஆனந்தின் மாமாவாக ராஜீவ்
- ஜானகியாக சௌகார் ஜானகி
- கோபால கிருஷ்ணனாக ராஜா
- வித்யாவின் தாயாக சத்தியப்பிரியா
- பாஸ்கரனின் மனைவியாக கே. ஆர். வத்சலா
- பாபுவாக ஆனந்த் பாபு
- ஆனந்தாக ஆனந்த்
- சிவாவாக சின்னி ஜெயந்த்
- ராஜாவின் வேலையாளாக டெல்லி கணேஷ்
- சாரதாவாக சாரதா பிரீதா
- அஞ்சலியாக சீலா
- ஆனந்தின் அத்தையாக சுபாசினி
- புருசோத்தமனின் மகளாக இலாவண்யா
- காவல்காரனாக இடிச்சப்புளி செல்வராசு
- மகாந்திரனாக மகேந்திரன்
- சிறப்புத் தோற்றத்தில் கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்பு தொகு
இப்படத்துக்கு முதலில் உத்தமப் புத்திரன் என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் பெயர் மாற்றப்பட்டது. படத்தில் குடும்பத் தலைவராக சிவாஜி கணேசன் நடிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் அவரது தேதி கிடைக்காததால் அப்பாத்திரத்துக்கு ஜெமினி கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]
இசை தொகு
படத்திற்கான இசையை மரகதமணி மேற்கொண்டார். படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களுக்கும் காளிதாசன் வரிகளை எழுதினார். [4]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
1 | இனி சுதந்திர தினமே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மரகதமணி, மின்மினி | காளிதாசன் | 02:40 |
2 | மை விழி உன் இமைகளில் | எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சுஜாதா | 04:08 | |
3 | மிட்டலடிக்கும் வெண்மை | எஸ் .பி. பாலசுப்பிரமண்யம், சுஜாதா | 05:07 | |
4 | பேரு நல்ல பேரு | டி. எஸ். ராகவேந்திரா, மரகதமணி, சுவர்ணலதா, சுஜாதா, சங்கீதா, ஹரிஷ் ராகவேந்திரா | 05:01 | |
5 | உன்னோடுதான் கனாவில் (மகிழ்ச்சி) | மனோ, கே.எஸ் சித்ரா | 04:24 | |
6 | உன்னோடுதான் கனாவில் (சோகம்) | மரகதமணி, கே.எஸ் சித்ரா | 04:52 |
வரவேற்பு தொகு
இந்தோலிங்க் "குடும்பத்தோடு பார்ப்பவர்களுக்கு படம் பிடித்துள்ளது" என்று எழுதியது. [5]
மேற்கோள்கள் தொகு
- ↑ https://screen4screen.com/movies/kondattam
- ↑ https://www.youtube.com/watch?v=CiEA846E6j8
- ↑ http://www.oocities.org/hollywood/lot/2330/gcnjul.html
- ↑ "Kondattam Songs". http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000863.
- ↑ https://web.archive.org/web/19990419202847/http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/kondaattam.htm