சிவப்பு மழை (திரைப்படம்)

வெ. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிவப்பு மழை (Sivappu Mazhai) என்பது வி. கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய 2010 ஆண்டைய தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். முன்னதாக கின்னஸ் விஷன் என்று குறிப்பிடப்பட்ட இப்படம் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து 11 நாட்களில் 23 மணி 45 நிமிட நேரத்தில் தயாரிக்கப்பட்டது. இப்படமானது பல கின்னஸ் உலக சாதனைகளை படைத்தவரான கனேடியத் தமிழர் சுரேஷ் ஜோக்கிம் தயாரித்து நடிக்க, உடன் மீரா ஜாஸ்மின், விவேக், சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிதுள்ளனர்.[1]

சிவப்பு மழை
இயக்கம்வி. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புசுரேஷ் ஜோக்கிம்
ஆண்ட்ரூ ரே ரேமண்ட்
கதைவி. கிருஷ்ணமூர்த்தி
வி. பிரபாகர்
சப் ஜான்
இசைதேவா
நடிப்புசுரேஷ் ஜோக்கிம்
மீரா ஜாஸ்மின்
சோனு
விவேக்
சுமன்
ஒளிப்பதிவுகே. விஸ்வநாதன்
எம். ஜமால்தீன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்சுரேஷ் ஜோச்சிம் நெட்வொர்க்
வெளியீடு9 ஏப்ரல் 2010 (2010-04-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படமானது அமைச்சரின் மகளும் தொலைக்காட்சி ஊடகவியலாளருமான மீரா ஜாஸ்மினைக் கடத்திச் செல்லும் இலங்கை இளைஞரான நந்தனைச் (சுரேஷ் ஜோச்சிம்) சுற்றி சுழல்கிறது.</br>

மீராவை மீட்பதற்கு அமைச்சர் (சுமன்) காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ராஜீவ்) மற்றும் அவரது துணை அதிகாரியாக (போஸ் வெங்கட்) உதவுகிறனர். காவல்துறையினரால் சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட இலங்கை நாட்டவரை விடுவிக்கக் கோரி நந்தனிடமிருந்து ஒரு சுவாரஸ்யமான கோரிக்கை வரும்போது கதையானது ஒரு திருப்பத்தை அடைகிறது.

நடிகர்கள்

தொகு

வளர்ச்சி

தொகு

கின்னஸ் ஹால் ஆஃப் ஃபேமர் மற்றும் கனடாவின் # 1 சாதனை படைத்தவரான கனடாவின் சுரேஷ் ஜோக்கிம் "சிவப்பு மழை" திரைப்படத்தை 11 நாட்கள் 23 மணி 45 நிமிடங்களில் இந்திய ஒன்றியதின், தமி்நாட்டின் சென்னையில் தயாரித்தார். உலகில் அதிவேகமாக தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 2010 ஏப்ரலில் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மீரா ஜாஸ்மினுடன் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்ததுள்ளர். இப்படத்தை வி. கிருஷ்ணமூர்த்தி இயக்குகினார். இசை - தேவா, உரையாடல் - பிரபாகர், படத் தொகுப்பு - வி. டி. விஜன், பாடல் வரிகள் - வைரமுத்து.

முந்தைய கின்னஸ் சாதனைப் பதிவு: தி ஃபாஸ்டஸ்ட் ஃபார்வர்டு (யுகே 1990) படத்தை 13 நாட்களில் ரஸ் மல்கின் தயாரித்து ஜான் கோர் இயக்கியிருந்தார் (இருவரும் இங்கிலாந்து)

சுரேஷ், 1,000 பணியாளர்களுடன், 2 மணி நேரம், 3 நிமிட திரைப்படத்தை 11 நாட்கள், 23 மணி, 45 நிமிடங்களில் தயாரித்து முடித்தார். திரைக்கதை எழுத்தாளர் திரைக்கதையை எழுதத் தொடங்கியவுடன் கடிகாரம் இயங்கத் தொடங்கியது. இந்த படத்தில் பணியாற்றிய தமிழகத் திரைப்படக் கலைஞர்கள், இதன் முடிவுகளில் மிகவும் திருப்தி அடைந்தனர், மேலும் இந்த சாதனைக்கு மிகவும் பெருமைப்படுகிறார்கள். இந்த படம் 22 மே 2009 @ மாலை 6:30 மணி முதல் 3 ஜூன் 2009 @ 6:15 மணி வரை தயாரிக்கபட்டது. படம் 11 நாட்கள் 23 மணி & 45 நிமிடங்களில் செய்து முடிக்கபட்டது ( கதை, திரைக்கதை, எழுதுவதில் தொடங்கி நான்கு பாடல்கள் இசையமைப்பது, தலைப்பு, படப்பிடிப்பு 60 காட்சிகளை இரண்டு மணி நேர முழு நீள திரைப்படாக படத்தொகுப்பு செய்தல் ஆகியவை நடந்தன.

இப்படத்தை புலன் விசாரனை, கேப்டன் பிரபாகரன், ராசையா உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய வி. கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். மீரா ஜாஸ்மின், விவேக், சுமன், போஸ் வெங்கட், ராஜீவ், தியாகு, அலெக்ஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர். ஜான் இ (திரைக்கதை), வி. பிரபாகர் (உரையாடல்), சீனிவாசம், இந்திரஜித் மற்றும் ஜமால் தீன் ( ஒளிப்பதிவு ), தேவா ( இசை ), வைரமுத்து ( பாடல் ), வி. டி. விஜயன் ( படத் தொகுப்பு ), கதிர் ( கலை இயக்கம் ) ஆகியோரும் பணியாற்றினர். இபட்டத்தின் வழியாக அமைதி, உலகளாவிய சகோதரத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சுரேஷ் ஜோச்சிம் & ஆண்ட்ரூ ரேமண்ட் ஆகியோர் இந்த படத்தை அண்டர் சுரேஷ் ஜோச்சிம் என்டர்டெயின்மென்ட் இன்க். & ஜோச்சிம் இன்டர்நேஷனல் இன்க் மூலமாக தயாரித்தனர்.[2]

நடிப்பு

தொகு

துவக்ககத்தில் மலையாள நடிகை நவ்யா நாயர் படத்தின் முதன்மைப் பெண் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டார். ஆனால் திரைக்கதையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மீரா ஜாஸ்மின் அவருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யபட்டார்.

இந்த படம் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 26 ஏப்ரல் 2009 அன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது விரைவாக தயாரிக்கபட்ட படத்திற்கான தற்போதைய சாதனையை முறியடிக்கும் முயற்சியாகும்.[3] இப்படத்தின் படப்பிடிப்பு மே 22 அன்று பாண்டிச்சேரியில் உள்ள நல்லா பண்ணை இல்லத்தில் தொடங்கியது, இது ஜூன் 3 வரை தொடர்ந்தது.[4]

படத்திற்கான இசையை தேவா அமைத்தார்.[5]

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 தமிழா தமிழா எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
2 கனவு காண்கிறேன் பிரவீனா
3 காதல் தாண்டி ஹரிச்சரன், சின்மாயி
4 உணர்ச்சிகளை ஸ்ரீகாந்த் தேவா, சுசித்ரா
5 போர்க்களத்தில் சுரேஷ் ஜோச்சிம், விஜிதா

விமர்சன வரவேற்பு

தொகு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியதாவது "சிவப்பு மழை மிகப் பெரிய திரைக்கதையைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும் முதல் முறையாக குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேலை செய்வது என்பது தயாரிப்பாளரின் பாராட்டத்தக்க முயற்சி ஆகும். " [6] இந்தியா கிளிட்ஸ் இதை "தயாரிப்பாளர்கள் தொட்ட கருப்பொருளைக் கருத்தில் கொண்டு செய்துள்ள ஒரு நல்ல முயற்சி" என்றது.[7]

குறிப்புகள்

தொகு
  1. "Meera Jasmine's Guinness Record film to begin soon! - Behindwoods.com - Tamil Movies News - Meera Jasmine Suresh Joachim". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  2. Rangarajan, Malathi (16 April 2010). "For the record — Sivappu Mazhai". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/For-the-record-Sivappu-Mazhai/article15693887.ece. 
  3. "Cinema Plus / Columns : Yet another record?". The Hindu. 2009-03-13. Archived from the original on 2009-03-18. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  4. "Events - Guinness Movie (Sivappu Malai) Movie Launched". IndiaGlitz. 2009-05-25. Archived from the original on 2009-05-26. பார்க்கப்பட்ட நாள் 2011-01-02.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-22.
  7. https://www.indiaglitz.com/sivappu-mazhai-tamil-movie-review-11103

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மழை_(திரைப்படம்)&oldid=3941473" இலிருந்து மீள்விக்கப்பட்டது