என் வீடு என் கணவர்
1990 திரைப்படம்
என் வீடு என் கணவர் (En Veedu En Kanavar) (வெளியீட்டுக்கு முன்பு மனைவியை காதலி என அழைப்பட்டது)[1] 1990 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். சென்பாக ராமன் இயக்கிய இப்படத்தில் சுரேஷ் நதியா ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜீவ், மனோரமா போன்றோர் இதர பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
என் வீடு என் கணவர் | |
---|---|
இயக்கம் | செண்பகராமன் |
தயாரிப்பு | எம். எஸ். கோபிநாத் |
கதை | செண்பகராமன் |
இசை | பி. சுரேந்தர் |
நடிப்பு | சுரேஷ் நதியா |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | வி. இராஜகோபால் |
கலையகம் | பிரீத்தி இந்தர் கம்பைன்ஸ் |
விநியோகம் | பிரீத்தி இந்தர் கம்பைன்ஸ் |
வெளியீடு | 13 ஏப்ரல் 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சுரேஷ் ராஜாவாக
- நதியா ராதாவாக
- ராஜீவ் குமாராக
- மனோரமா
- மாதுரி
- செந்தில்
- எஸ். எஸ். சந்திரன்
- ஜெய்கணேஷ்
- டெல்லி கணேஷ்
- அஜித் குமார் "என் கண்மணி" பாடலில் பள்ளி மாணவனாக
தயாரிப்பு
தொகுஇப்படத்திற்கு முதலில் மனைவியைக் காதலி என பெயரிடப்பட்டது. படத்தின் தயாரிப்பு மற்றும் தணிக்கைப் பணிகள் 1988 இல் நிறைவடைந்தன. என்றாலும் 1990 இல்தான் படம் வெளியிடப்பட்டது.[2] படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" பாடலில் பள்ளி மாணவனாக அஜித் குமார் ஒரு பள்ளி சிறுவனாக நடித்துள்ளார். இதனால் இது திரையில் அவரது முதல் தோற்றமாக ஆனது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.bollywoodvinyl.in/products/manaiviyai-kaadali-1987-tamil-bollywood-vinyl-lp-1
- ↑ "Film News Anandan". தினகரன் Vellimalar. 25 May 2013.
- ↑ Bali, Karan (2015-05-01). "Ajith Kumar". Upperstall.com. http://upperstall.com/profile/ajith-kumar/.