கெத்து
கெத்து (Gethu) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்க் குற்றத் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். முதன்மைக் கதாபாத்திரங்களில் உதயநிதி ஸ்டாலினும் ஏமி சாக்சனும் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்தினைத் திருக்குமரன் இயக்கியுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், விக்ராந்த் ஆகியோரும் துணைக்கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும் சுகுமாரின் படப்பிடிப்பிலும் சனவரி 14, 2016 அன்று இத்திரைப்படம் வெளியானது.
கெத்து | |
---|---|
கெத்து சுவரொட்டி | |
இயக்கம் | திருக்குமரன் |
தயாரிப்பு | உதயநிதி ஸ்டாலின் |
கதை | திருக்குமரன் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | உதயநிதி ஸ்டாலின் ஏமி சாக்சன் சத்யராஜ் |
ஒளிப்பதிவு | சுகுமார் |
படத்தொகுப்பு | தினேஷ் பொன்ராஜ் |
கலையகம் | ரெட் ஜயன்ட் மூவிஸ் |
விநியோகம் | ரெட் ஜயன்ட் மூவிஸ் |
வெளியீடு | சனவரி 14, 2016 |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுநடிகர் | கதைமாந்தர் |
---|---|
உதயநிதி ஸ்டாலின் | சேது |
ஏமி சாக்சன் | நந்தினி இராமானுசம் |
விக்ராந்த் | இடேவிடு கிறித்தோபர் |
சத்யராஜ் | துளசி இராமன் |
கருணாகரன் | காவலர் |
அவினாசு | இடேவிட்டின் முதலாளி |
மைம் கோபி | இரவுடி இராசா |
அனுராதா | இராசாவின் தாயார் |
பாடல்கள்
தொகுகெத்து | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 22:15 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | இடிவோ | |||
இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜெயராஜ் | |||
ஹாரிஸ் ஜெயராஜ் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.[3] 2015 திசம்பர் 25ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பை இடிவோ வெளியிட்டது.[4] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 2.5 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[5]
# | பாடல் | வரிகள் | பாடகர் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "தில்லு முல்லு" | வி. பத்மாவதி, சீர்காழி சிற்பி, கானா வினோத் | நரேஷ் ஐயர், இரனினா இரெட்டி | 6:02 | |
2. | "தேன் காற்று" | தாமரை | ஹரிச்சரண், சாசா திருப்பதி | 5:05 | |
3. | "எவன்டா இவன்" | எம். சி. விக்கி | எம். சி. விக்கி,ஷர்மிளா | 3:11 | |
4. | "அடியே அடியே" | தாமரை | கார்த்திக், சாலினி | 3:22 | |
5. | "முட்டைப் பச்சி" | கானா வினோத் சி. பிரபா | கானா வினோத்து, அந்தோனி தாசன், மரண கானா விஜி, எபிசா | 4:35 | |
மொத்த நீளம்: |
22:15 |
வெளியீடு
தொகுஇத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வச் செய்ம்மதி ஒளிபரப்பானது சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது.
வரிவிலக்கு
தொகுகெத்து தமிழ்ச் சொல் அன்று எனக்கூறி இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.[7] தமிழ் அகரமுதலியில் கெத்து என்ற சொல் உள்ள பக்கத்தைத் துவிட்டர், பேசுபுக்கு ஆகியவற்றில் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[8] இது தொடர்பாக படக்குழு வரிவிலக்கு அளிக்க சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின் விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் கெத்து தமிழ் சொல்லே என்பதை அறிந்து வரிவிலக்கு அளிக்க உத்தரவிட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "What is Udhay`s `Gethu` is all about?". Sify. 26 மே 2015. Archived from the original on 2015-05-26. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.
- ↑ "Gethu (2016) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ "'கெத்து' இசை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு 'சொத்தாக' அமையுமா?". தினமலர் சினிமா. 27 திசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ Keerthi Leo (28 திசம்பர் 2015). "கெத்து இசை வெளியீட்டு விழாவின் புகைப்படத் தொகுப்பு". உதயன் சினிமா செய்திகள். பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ "Gethu Songs Review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ "Gethu". Saavn. Archived from the original on 2015-12-26. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ "'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி". IndiaGlitz. 18 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.
- ↑ ஸ்கிரீனன் (18 சனவரி 2016). "'கெத்து'க்கு வரிச்சலுகை இல்லை: நீதிமன்றத்தை நாட படக்குழு முடிவு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2016.