தங்க மகன் (1983 திரைப்படம்)
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தங்க மகன் (Thanga Magan) இயக்குனர் ஏ. ஜெகந்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-நவம்பர்-1983. தெலுங்கில் நுவ்வே நேனே என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது.[1]
தங்க மகன் | |
---|---|
சுவர் ஓவிய விளம்பரம் | |
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | வி. தமிழழகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் பூர்ணிமா ஜெயராம் ஜெய்சங்கர் லூஸ் மோகன் மனோகர் பார்த்திபன் சேகர் வேலு ஹெரான் ராமசாமி ரவீந்தர் தேங்காய் சீனிவாசன் வி. கோபாலகிருஷ்ணன் வி. கே. ராமசாமி மனோரமா ரஜனி சில்க் ஸ்மிதா விஜயகுமாரி |
ஒளிப்பதிவு | விஸ்வம் நடராசன் |
படத்தொகுப்பு | கே. ஆர். கிருஷ்ணன் |
வெளியீடு | நவம்பர் 4, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- இரசினிகாந்து - அருண்
- பூர்ணிமா பாக்கியராஜ் - சித்ரா
- ஜெய்சங்கர் - ராஜலிங்கம்
- தேங்காய் சீனிவாசன் - வெள்ளியங்கிரி
- சில்க் ஸ்மிதா - ரேகா
- ரவீந்தரன் - ரவி
- சி. ஆர். விஜயகுமாரி - இலட்மி
- மனோரமா - அன்னபூரிணி
- வி. கே. ராமசாமி - சிதம்பரம்
- வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்) - கேப்டன் இரகுராம்
- இரா. சு. மனோகர் - காளி
- சி. ஆர். பார்த்திபன் - காவல் ஆணையாளர்
- பூர்ணம் விஸ்வநாதன் - நீதியரசர்
- ஆர். நீலகண்டன்
- லூசு மோகன்
- குண்டு கல்யாணம்
- தயிர் வடை தேசிகன்
- அனுராதா (மச்சானைப் பாரடி பாடலில் சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
தொகுபடத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.[2]
தங்க மகன் | |
---|---|
திரையிசைப் பாடல்கள்
| |
இசைத்தட்டு நிறுவனம் | எகோ |
No. | பாடல் | பாடகர்(கள்) | பாடல் வரிகள் | நேரம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "அடுக்கு மல்லிகை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | நா. காமராசன் | 4:15 |
2 | "மச்சான பாரடி" | எஸ். ஜானகி, வாணி ஜெயராம் | வைரமுத்து | 4:28 |
3 | "பூமாலை ஒரு பாவை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வாலி | 6:13 |
4 | "ராத்திரியில் பூத்திருக்கும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | 4:07 |
5 | "வா வா பக்கம் வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | முத்துலிங்கம் | 5:02 |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://web.archive.org/web/20131127232003/http://aptalkies.com/movie.php?id=4947
- ↑ "Thanga Magan Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-11-21.