சி. ஆர். பார்த்திபன்
சி. ஆர். பார்த்திபன் (C. R. Parthiban, 1929 – 25 சனவரி 2021) இந்தியத் தமிழ்த் திரைப்பட, மற்றும் நாடக நடிகர் ஆவார்.[1][2] இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்துப் புகழ் பெற்றார்.[3][4] தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2]
சி. ஆர். பார்த்திபன் | |
---|---|
பிறப்பு | சக்ரவர்த்தி ஆர். பார்த்திபன் 1929 வேலூர், தமிழ்நாடு |
இறப்பு | சனவரி 25, 2021 (அகவை 91–92) சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை - பொருளியல் (லயோலா கல்லூரி) |
பணி | நடிகர் |
அறியப்படுவது | நடிகர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவேலூரை சொந்த ஊராகக் கொண்ட பார்த்திபன், பள்ளிப் படிப்பின் பின், மேல்படிப்புக்காக 1946 இல் சென்னை வந்து[1] லயோலா கல்லூரியில் படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் இவர் நடித்துள்ளார்.[2]
முதன் முதலில் ஜெமினி ஸ்டூடியோவில் 'இன்சனியாத்' என்ற இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு 'புதுமைப்பித்தன்' (1957) தமிழ்த் திரைப்படத்தில் டி. ஆர். ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடகக் குழுத் தலைவனாக நடித்தார். இரும்புத்திரை, வஞ்சிக்கோட்டை வாலிபன், மோட்டார் சுந்தரம் பிள்ளை என ஜெமினியின் பல படங்களில் நடித்தார்.[2]
கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். 1982 இல் கோழி கூவுது படத்தில் அண்ணே அண்ணே பாடல் காட்சியில் சிறப்பாக நடித்துப் பாராட்டுப் பெற்றார்.[2]
மறைவு
தொகுசக்ரவர்த்தி ஆர். பார்த்திபன் 2021 சனவரி 25 இல் தனது 91-வது அகவையில் சென்னையில் காலமானார்.[2]
நடித்த சில திரைப்படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Selvaraj, Balamurugan (22 November 2017). "60 years of Cine-life-journey" (in en). Dailytuner. http://dailytuner.wixsite.com/dailytuner/single-post/2017/11/22/60s-Jackson-Durai-shares-the-experience-of-his-film-journey.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "ஐந்து முதல்வர்களுடன் தொடர்பில் இருந்தவர்; மறக்கவே முடியாத 'ஜாக்ஸன் துரை' சி.ஆர்.பார்த்திபன்!". இந்து தமிழ் (நாளிதழ்). 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Naig, Udhav (2 October 2014). "Fans keep the legend alive" (in en-IN). தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/chen-events/fans-keep-the-legend-alive/article6466629.ece.
- ↑ Selvaraj, Balamurugan (22 November 2017). "'Veerapandiya Kattabomman' villain recalls cine life" (in en-US). The News Today இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171123220812/https://newstodaynet.com/index.php/2017/11/22/veerapandiya-kattabomman-villain-recalls-cine-life/.