பூர்ணிமா பாக்கியராஜ்
இந்திய நடிகை
பூர்ணிமா பாக்கியராஜ் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980-1984 ஆண்டுகளில் பிரபல நடிகையாகத் திகழ்ந்தார்.[1] இவர் சங்கர் என்ற நடிகருடன் மலையாளத்திலும், மோகன் என்ற நடிகருடன் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.
பூர்ணிமா பாக்கியராஜ் | |
---|---|
![]() 2012 | |
பிறப்பு | பூர்ணிமா ஜெயராமன் கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | பூர்ணிமா பாக்கியராஜ் |
செயற்பாட்டுக் காலம் | 1980 - 1984 2013 - தற்போது |
பெற்றோர் | ஜெயராமன் |
வாழ்க்கைத் துணை | பாக்யராஜ் (m. 1984 - தற்போது) |
இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டிருந்த பாக்கியராஜை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.