ஏ. ஜெகந்நாதன் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ஏ. ஜெகந்நாதன் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொத்தம் 34 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இவர் அக்டோபர் 7, 2012 அன்று தனது 78 ஆவது வயதில் காலமானார்.

ஏ. ஜெகந்நாதன்
பிறப்பு(1935-11-26)26 நவம்பர் 1935
திருப்பூர், தமிழ் நாடு, இந்தியா
இறப்பு7 அக்டோபர் 2012(2012-10-07) (அகவை 76)
கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1973-2012
வாழ்க்கைத்
துணை
ராஜாமணி
பிள்ளைகள்உஷா தேவி
பவித்ரா தேவி
அருண் குமார்

குடும்பம்

தொகு

திருப்பூரில் நெசவு பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் ஆறுமுகம்முதலியார்- ராமாத்தாள் தம்பதியர் மகனாக பிறந்தார். மறைந்த இயக்குநர் ஜெகந்நாதனின் வாழ்க்கைத் துணைவி ராஜாமணி. இந்த இரட்டையருக்கு இரு மகள்களும் (உஷா தேவி, பவித்ரா) ஒரு மகனும் (அருண் குமார்) உள்ளனர்.

தொழில்

தொகு

இவர் தினத்தந்தி நாளிதழின் உதவி ஆசிரியராகத் தன் பணியினைத் தொடங்கினார். பின்னர் திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைந்தார். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பயல் தமிழ்த் திரைப்படமாகும். முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோரை வைத்துப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார். திரைப்படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய 7 தொலைக்காட்சித் தொடர்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட தமிழ்த் தாத்தா சிறந்த தொடரென்ற பாராட்டைப் பெற்றது.

இயக்கிய திரைப்படங்கள்

தொகு

இது முழுமையான பட்டியல் அல்ல.

1994 வாட்ச்மேன் வடிவேலு (தமிழ்)

1994 ஹீரோ (தமிழ்)

1991 மில் தொழிலாளி (தமிழ்)

1991 அர்ச்சனா ஐ.ஏ.எஸ்

1989 என் தங்கை

1988 தர்மாத்மா (கன்னடம்)

1987 காதல் பரிசு (தமிழ்)

1987 கைதி (தமிழ்)

1987 முத்துக்கள் மூன்று (தமிழ்)

1985 கற்பூர தீபம்

1985 மீண்டும் பராசக்தி (தமிழ்)

1985 ரகசிய ஹாந்தகுடு (தெலுங்கு)

1984 ஓ மானே மானே (தமிழ்)

1984 கொம்பேரி மூக்கன் (தமிழ்)

1984 நாளை உனது நாள் (தமிழ்)

1984 நுவ்வா நேனா (தெலுங்கு)

1983 மூன்று முகம் (தமிழ்)

1983 தங்க மகன் (தமிழ்)

1983 வெள்ளை ரோஜா (தமிழ்)

1982 குரோதம் (தமிழ்)

1980 ஆயிரம் வாசல் இதயம் (தமிழ்)

1979 ஜெயா நீ ஜெயுச்சிட்டே (தமிழ்)

1979 முதல் இரவு (தமிழ்)

1977 நந்தா என் நிலா (தமிழ்)

1976 நல்ல பெண்மணி (தமிழ்)

1976 அதிர்ஷ்டம் அழைக்கிறது (தமிழ்)

1976 குமார விஜயம் (தமிழ்)

1975 இதயக்கனி (தமிழ்)

1974 இதயம் பார்க்கிறது (தமிழ்)

1973 மணிப்பயல் (தமிழ்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஜெகந்நாதன்_(இயக்குநர்)&oldid=3955609" இலிருந்து மீள்விக்கப்பட்டது