கிங் காங் (நடிகர்)

இந்திய நடிகர்

கிங் காங் ( பிறப்பு சங்கர் ) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். கிங் காங்கின் நடனம் இடம்பெற்ற அதிசயப் பிறவி (1990) படத்தின் துண்டுக் காட்சி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் இணையத்தில் வைரல் ஆனது.[3][4]

கிங் காங்
பிறப்புஏ. சங்கர்
18 ஆகத்து 1971 (1971-08-18) (அகவை 53)[1]
வரதராஜபுரம், தமிழ்நாடு, இந்தியா[2]
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985-தற்போது வரை
பெற்றோர்ஏழுமலை,
காசியம்மாள்
வாழ்க்கைத்
துணை
கலா

தொழில்

தொகு

கிங் காங் தமிழ் படங்களில் முதன்மையாக நகைச்சுவை துணை வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றிய இவர் நடனக் கலைஞராக மேடை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.[5] ரஜினிகாந்திற்கு முன்னால் கிங் காங் நடனமாடிய அதிசயப் பிறவி (1990) திரைப்படத்தின் துண்டுக் காட்சி 2000 களின் பிற்பகுதியில் " லிட்டில் சூப்பர்ஸ்டார் " என்ற பெயரில் பிரபலமான இணைய வைரல் கானொளியாக மாறியது.

2007 ஆம் ஆண்டில், இவர் வறுமையில் வாடுவதாக செய்திகள் வந்தன.[6] இதன் பிறகு இவர் மீண்டும் பட வாய்ப்புகள் பெற்று படங்களில் தோன்றத் தொடங்கினார். குறிப்பாக போக்கிரியில் ஒரு நடனக் காட்சியில் தோன்றினார். பின்னர் வடிவேலுவுடன் நகைச்சுவைக் காட்சிகளில் கருப்பசாமி குத்தகைதாரர் (2007) மற்றும் கந்தசாமி (2009) ஆகியவற்றில் தோன்றினார். நடிகை சகீலாவுக்கு ஜோடியாக ஒன்னற குள்ளன் என்ற பெயரிலான குறைந்த செலவில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் எடுக்கபட்ட திரைப்படத்தில் இவர் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் படம் வெளியிடப்படாமல் உள்ளது.[7]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1988 நெத்திஅடி
1988 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்
1988 யமுடிக்கி மொகுடு தெலுங்கு படம்
1989 அன்புக்கட்டளை
1989 கில்லாடி ஜோகி கன்னட படம்
1990 ராஜா விக்ரமரகா தெலுங்கு படம்
1990 அதிசயப் பிறவி நடனக் கலைஞர்
1991 கிழக்கு கரை
1992 சின்ன பசங்க நாங்க
1993 சின்ன ஜமீன்
1994 சின்னபுள்ள
1994 ஊழியன்
1994 கண்டுகல்லி கன்னட படம்
1994 கரனா மொகுடு தெலுங்கு படம்
1995 ஜமீன் கோட்டை பாண்டி
1996 கட்டபஞ்சாயத்து
1996 பாஞ்சாலங்குறிச்சி
1996 டேக் இட் ஈசி ஊர்வசி
1997 சக்தி
1997 கூங்காட் இந்தி படம்
1998 நாம் இருவர் நமக்கு இருவர்
1998 தினந்தோறும்
1998 புதுக்குடித்தனம் அருவா வேலு
1999 சிவன் நட்டு
1999 பிவி தம்பர் .1 இந்தி படம்
2000 தேரா ஜாதூ சல் கயா இந்தி படம்
2000 கண்ணால் பேசவா
2000 நாகலிங்கம்
2000 நீ எந்தன் வானம்
2002 எச்2O கன்னடப் படம்
2003 காதல் கிறுக்கன் வேலையாள்
2005 கிச்சா வயசு 16
2006 கை வந்த கலை அலுவலக உதவியாளர்
2006 வாத்தியார்
2007 போக்கிரி சரக்குந்து ஓட்டுநர்
2007 கருப்பசாமி குத்தகைதாரர்
2007 பிறகு சமரசத்தின் உதவியாளர்
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
2008 காசிமேடு கோவிந்தன் கோவிந்தனின் நன்பன்
2008 முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
2009 கந்தசாமி திருடன்
2009 சிரித்தால் ரசிப்பேன் கத்திக் குத்து பாண்டியன்
2010 கச்சேரி ஆரம்பம்
2010 சுறா போலி காவல் அதிகாரி
2013 சென்னை எக்ஸ்பிரஸ் வழிப்போக்கன் இந்தி படம்
2014 தெனாலிராமன்
2014 விலாசம்
2015 மகாராணி கோட்டை சாமி
2016 சுட்டபழம் சுடாதபழம்
2016 சும்மாவே ஆடுவோம்
2016 பயம் ஒரு பயணம்
2018 நரி வேட்டை

குறிப்புகள்

தொகு
  1. "E.Kingkong (a.k.a) Shankar | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  2. "Profile of King Kong|Lakshmansruthi Orchestra". www.lakshmansruthi.com. Archived from the original on 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  3. "King kong Filmography, King kong Movies, King kong Films — Filmibeat". FilmiBeat.
  4. Priya Prakashan. "Go bananas with Rajinikanth and Little Superstar dancing sensation!". India.com. Archived from the original on 25 April 2014. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
  5. "Dance, music programmes steal the show in Tiruchi". The Hindu. Archived from the original on 23 December 2015. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
  6. "Struggle of an actor". indiaglitz.com. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.
  7. "King Kong turns hero in Onnara Kallan!". www.filmibeat.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிங்_காங்_(நடிகர்)&oldid=3944328" இலிருந்து மீள்விக்கப்பட்டது