பயம் ஒரு பயணம்

மணிசர்மா இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பயம் ஒரு பயனம் (Bayam Oru Payanam) ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். மணிஷர்மா எழுதி இயக்க, விஷாகா சிங் , பரத் ரெட்டி மற்றும் மீனாட்சி தீக்ஷித் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர், சிங்கம்பூலி ஒரு முக்கிய துணை பாத்திரத்தில் இதில் நடித்துள்ளார். பிரசாத் இசையமைத்த இந்த படம், இந்தியாவில் 25 ஆகஸ்ட் மாதம் 2016 ஆம் தேதி வெளியிடப்பட்டது.[1]

பயம் ஒரு பயணம்
இயக்கம்ஆர். ஆர். மணி ஷர்மா
தயாரிப்புஎஸ். துரை
எஸ். ஷண்முகம்
இசைபிரசாத்
நடிப்புவிசாகா சிங்
பரத் ரெட்டி
மீனாட்சி தீட்சித்
ஒளிப்பதிவுஅன்றவ்
படத்தொகுப்புஎல். வி. கே. தாஸ் டேனியல்
கலையகம்ஆக்டோ சிபைடர் நிறுவனம்
வெளியீடு25 ஆகஸ்ட் 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

ஒரு புகைப்பட பத்திரிகையாளரான ராம் (பாரத் ரெட்டி), தன் தந்தையின் கார் விபத்துக்குள்ளாவதாக சிறுவயதில் கனவு காணுவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த நாளே ராம் சில படங்களை புகைபடமெடுக்க ஒரு காட்டில் தனியாகச் சென்றான். யோகி பாபு காவலாளியாக இருக்கும் ஆளில்லா பங்களாவிற்கு வழி காட்டுகிறார் தரகர் கவரிமான் (சிங்கம்புலி). அந்த வீட்டில் ஒரு மெமரி கார்டை கண்டெடுக்கிறான் ராம். அதில் தனக்கு தெரிந்த பெண்ணின் புகைப்படஙகள் இருக்கின்றன. அதன் பின்னர் அவன் எங்கு சென்றாலும், ஒரு கொடூர பெண் பேய் வந்து குளியல் அறை, குளிர் சாதனப்பெட்டி, படுக்கை அறை என்று பயமுறுத்துகிறது. வண்டி ஓட்டும் பொழுதும் அந்த பேய் பயமுறுத்தும் பொழுது தான், தன்னை தான் அந்த பேய் துரத்துவதாக உணர்ந்தான்.[2]. அவனது மனைவியையும் மகளையும் பார்க்க அவன் தனது இடத்திற்குத் திரும்ப முடியுமா? பேய் அவனையும், அவனது குடும்பத்தினரையும் பயமுறுத்தி வேட்டையாடியதா? என்பது மீதிக்கதை[3]

தயாரிப்பு

தொகு

2015 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பயம் ஒரு பயணம் படத்தை தொடங்கினார் மணிஷர்மா. இந்த படம் 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் முழுவதுமாக நிறைவடைந்ததாகக் கருதப்பட்டது.. விஷாகா சிங் , பரத் ரெட்டி மற்றும் மீனாட்சி தீட்சித் ஆகியோர் இந்த படத்தில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர், தயாரிப்பாளர்கள் அதை "பெண்-சார்ந்த, திகில் படம்" என்று விவரிக்கின்றனர்.[4] டிசம்பர் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மூணாரில் இருபது நாள் கால அட்டவணையை பார்வையிட்டார் .[5][6] சென்னையில் படப்பிடிப்பு முடிந்த உடன் 2016 ஜனவரியில் படப்பிடிப்பு முடிவடைந்தது, பிந்தைய தயாரிப்பு வேலைகள் அதன் பிறகு தொடர்ந்தன.[7]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயம்_ஒரு_பயணம்&oldid=3660408" இலிருந்து மீள்விக்கப்பட்டது