சின்ன பசங்க நாங்க

ராஜ்கபூர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சின்ன பசங்க நாங்க 1992 ஆம் ஆண்டு முரளி மற்றும் ரேவதி நடிப்பில், இளையராஜா இசையில், ராஜ்கபூர் இயக்கத்தில், ஏ. ஜி. சுப்ரமணியன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1]

சின்ன பசங்க நாங்க
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புஏ. ஜி. சுப்ரமணியம்
கதைராஜ் கபூர்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ரகுநாதரெட்டி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஏ.ஜி.எஸ் மூவிஸ்
வெளியீடு1 மே 1992 (1992-05-01)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

முத்துக்காளை (முரளி) நகரத்தில் படிப்பை முடித்து தன் கிராமத்திற்கு வருகிறான். அம்பலம் (ஆர். பி. விஸ்வம்) அந்த கிராமத்தின் தலைவர். பூச்செண்டு (சாரதா பிரீதா) முத்துக்காளையை விரும்புகிறாள். முத்துக்காளையின் முறைப்பெண்ணான மரிக்கொழுந்தும் (ரேவதி) அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.

ஒருநாள் வீசும் புயல் காற்றின் காரணமாக அந்த ஊர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த ஊரிலுள்ள வீடுகள் இடிந்து ஏழை மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். புயல் காற்று ஓய்ந்து இயல்புநிலை திரும்பும் வரை அந்த கிராமத்துக் கோயிலில் தங்கிக்கொள்ள அம்பலத்திடம் அனுமதி கேட்கின்றனர். அம்பலம் அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறான். பூச்செண்டுவின் தாய் அந்தக் கோயிலின் பூட்டை உடைத்து மக்களை கோயிலுக்குள் தங்க வைக்கிறாள். தான் சொன்னதை மீறி அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துப் போனதால் ஆத்திரப்படும் அம்பலம் பஞ்சாயத்தைக் கூட்டுகிறான். அதில் பூச்செண்டுவின் தாய்க்கு அவள் தலையை மொட்டையடிக்கும் தண்டனையை வழங்குகிறான். மேலும் பூச்செண்டு அந்தக் கோயிலில் தேவதாசியாக உத்தரவிடுகிறான்.

இந்த அநீதியான தண்டனையைக் கண்டு கோபப்படும் முத்துக்காளை பூச்செண்டுவை அந்த தண்டனையிலிருந்து காப்பாற்ற அவளைத் திருமணம் செய்கிறான். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி மற்றும் கங்கை அமரன்.[2][3]

வ. எண் பாடல் பாடகர்(கள்) காலநீளம்
1 என்ன மானமுள்ள பொண்ணுன்னு எஸ். ஜானகி 4:58
2 இங்கே மானமுள்ள பொண்ணு எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:46
3 ஜோடி நல்ல ஜோடி இது மலேசியா வாசுதேவன், சித்ரா 4:57
4 கோவணத்த இறுக்கிக்கட்டு மனோ 5:16
5 மயிலாடும் தோப்பில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:57
6 வெளக்கு வச்சா மலேசியா வாசுதேவன் 4:57

வரவேற்பு

தொகு

இப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய வெற்றித் திரைப்படம்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "சின்ன பசங்க நாங்க".
  2. "பாடல்கள்". Archived from the original on 2014-03-17. Retrieved 2019-02-22.
  3. "பாடல்கள்".
  4. "100 நாட்கள்".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_பசங்க_நாங்க&oldid=3792931" இலிருந்து மீள்விக்கப்பட்டது