சக்தி (1997 திரைப்படம்)

1997 தமிழ் திரைப்படம்

சக்தி (sakthi) 1997 ஆம் ஆண்டு வினீத் மற்றும் யுவராணி நடிப்பில், ஆர். ரகுராஜ் இயக்கத்தில், கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில், ஆர். ஆனந்த் இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம்.[1][2]

சக்தி
இயக்கம்ஆர். ரகுராஜ்
தயாரிப்புகே. டி. குஞ்சுமோன்
திரைக்கதைஆர். ரகுராஜ்
இசைஆர். ஆனந்த்
நடிப்பு
ஒளிப்பதிவுதிரு
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல்
வெளியீடுசனவரி 10, 1997 (1997-01-10)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

திருமணமாகாத பெண்ணான சீதாலட்சுமி (ராதிகா) கர்ப்பமாக இருக்கிறாள். அதற்குக் காரணம் யாரென்பதை கூற மறுக்கிறாள். கிராமத்தின் தலைவரான பெரியய்யா (விட்டல் ராவ்) அவளைக் கிராமத்தைவிட்டுத் தனியே ஒரு குடிசையில் வசிக்கும் தண்டனையளிக்கிறார். அவளுக்குப் பிறக்கும் குழந்தையை வேறு ஒரு ஊரில் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணமான தர்மராஜூக்கு (சிவகுமார்) வரலக்ஷ்மியுடன் (விஜி) திருமணம் நடைபெறுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தை வளர்ந்து இளைஞன் சக்தியாக (வினீத்) அந்த ஊருக்குத் திரும்புகிறான். அந்த ஊர் கோயிலில் வேலைக்குச் சேர்கிறான். அவன் தன்னை யாருமற்ற அனாதை என்றே எண்ணியுள்ளான். சக்தியும் அதே ஊரைச் சேர்ந்த ராணியும் (யுவராணி) ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வரலட்சுமியின் சகோதரன் சேதுபதியின் (நிழல்கள் ரவி) திட்டத்தின்படி அந்தக் கோயிலின் கலசத்தைத் திருட வரும் கொள்ளையர்களின் முயற்சி சக்தியால் தடுக்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது முறை சேதுபதி அக்கலசத்தை திருடிவிடுகிறான். அந்தப்பழி சக்தியின் மீது விழுகிறது. அவனை கோயில் வேலையிலிருந்து நீக்குகிறார் பெரியய்யா. சக்திக்கு தன் பெற்றோர்கள் யார் என தெரியவருகிறது. அதன் பின் தான் நிரபராதி என்று நிரூபித்தானா? அவனது பெற்றோர் அவனை ஏற்றுக்கொண்டனரா? தன் காதலியைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர். ஆனந்த். பாடலாசிரியர் வைரமுத்து.

வ. எண் பாடல் பாடகர்(கள்) கால நீளம்
1 ஆராரோ என்பது பி. பி. உன்னிகிருஷ்ணன் 3:03
2 அச்சு வெல்லமே கோபால் ராவ், சுவர்ணலதா 5:08
3 மானாமதுரை மனோ, சுவர்ணலதா 4:02
4 முத்தம் கொடுத்தால் எஸ். பி. பாலசுப்பிரமணியம், அனுபமா 4:48
5 சக்தி சக்தி கவிதா கிருஷ்ணமூர்த்தி 2:35
6 யானை யானை வடிவேலு 4:50

மேற்கோள்கள்

தொகு
  1. "Shakthi (1996) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
  2. "Filmography of sakthi". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_(1997_திரைப்படம்)&oldid=3879097" இலிருந்து மீள்விக்கப்பட்டது