சின்ன ஜமீன்

ராஜ்கபூர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சின்ன ஜமீன் (Chinna Jameen) 1993 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் கதை எழுதி இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர். பி. விஸ்வம் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தான் நடிகை வினிதா அறிமுகமானார். இத்திரைப்படம் இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது.[1][2][3]

சின்ன ஜமீன்
ஒலிநாடா அட்டை
இயக்கம்ராஜ்கபூர்
தயாரிப்புகே. பாலு
கதைராஜ்கபூர்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகன்யா
ஒளிப்பதிவுபாலமுருகன்
படத்தொகுப்புபி. எஸ். நாகராஜ்
கலையகம்கே. பி. பிலிம்ஸ்
விநியோகம்கே. பி. பிலிம்ஸ்
வெளியீடு13 நவம்பர் 1993 (1993-11-13)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

தொகு

ராசய்யாவின் (கார்த்திக்) சொத்தை அபகரிப்பதற்காக அவனது தாய் மாமாவான ரத்னவேல் அவனை ஒரு வெகுளிதனமான விளையாட்டு பிள்ளையாகவும் உலகம் தெறியாத மனிதனாக வளர்க்கிறார். ராசய்யா அந்த ஊரிலுள்ள ஜோதி என்பவ்ரை காதலிக்கிறார். இதனை அறிந்த ரத்னவேல் தனது உதவியாளரைக் கொண்டு அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விடுகிறார். ஜோதியின் சகோதரியான சத்யா சுகன்யா அந்த ஊரின் கிராம அதிகாரியாக சேருகிறார். தனது தங்கையின் இறப்பிற்கு பழி வாங்க நினைக்கிறார். ராசய்யாவை காதலித்து ஒரு சிறந்த தெளிவான மனிதராக மாற்றுவதாக கதை அம்சம் அமைந்த திரைப்படமாக நகர்கிறது.

நடிகர்கள்

தொகு
சின்ன ஜமீன்
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்29:14
இசைத்தட்டு நிறுவனம்ஏவிஎம் அடியோ
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]

எண் பாடல் பாடகர்கள் காலம்
1 "மானமுள்ள மனுசங்க" மனோ 4:41
2 "நான் யாரு" இளையராஜா 4:51
3 "வண்ணத்து பூச்சி" சித்ரா 0:50
4 "ஒரு மந்தாரப்பூ" மனோ, சித்ரா 4:31
5 "ஒனப்பு தட்டு" இளையராஜா, சுவர்ணலதா 4:52
6 "அடி வண்ணாத்தி" மனோ, சுவா்ணலதா 4:59
7 "யார் சுமந்து" இளையராஜா 1:27

மேற்கோள்கள்

தொகு
  1. "Find Tamil Movie Chinna Jameen". jointscene.com. Retrieved 2011-12-08.
  2. "Chinna Jamin". popcorn.oneindia.in. Retrieved 2011-12-08.
  3. "Filmography of chinna jamin". cinesouth.com. Retrieved 2011-12-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Chinna Jamin". thiraipaadal.com. Retrieved 2011-12-08.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_ஜமீன்&oldid=4202977" இலிருந்து மீள்விக்கப்பட்டது