விலாசம் (திரைப்படம்)

2014 திரைப்படம்

விலாசம் (Vilaasam) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். பா. ராஜகனேசன் எழுதி இயக்கிய இப்படத்தில் பவன், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். படமானது 14 நவம்பர் 2014 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் இது தெலுங்கில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யபட்டு வெளியிடப்பட்டது.[1]

விலாசம்
இயக்கம்பா. இராஜகணேசன்
தயாரிப்புபவித்ரா பிரசாந்த்
கதைபா. இராஜகணேசன்
இசைஇரவி ராகவ்
நடிப்பு
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
வி. ஏ. இரமலிங்கம்
படத்தொகுப்புரங்கீஸ் சந்திரசேகர்
கலையகம்சிறீ சனா பிலிம்ஸ்
வெளியீடு14 நவம்பர் 2014 (2014-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ கணேசன் இயக்கியுள்ளார். படத்தில் பவன், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர்.[2][3]

படத்திற்கு ரவி ராகவ் இசையமைத்தார்.

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "யாரிவரோ எவரவரோ"  ரஞ்சித்  
2. "சிலுக்கு சுந்தரியே"  திப்பு, பிரியதர்சினி, இராகுல்  
3. "காசு தந்தவன"  கானா பாலா, ஜெயமூர்த்தி  
4. "நாலை ஓரம் ஊரும் நிலவு"  சின்மயி, ஹரிசரண்  
5. "நண்பா நண்பா"  தீபக்  

வெளியீடு மற்றும் வரவேற்பு

தொகு

இப்படம் 14 நவம்பர் 2014 அன்று தமிழகத்தில் ஆறு படங்களின் ஊடாக வெளியிடப்பட்டது.[4] தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இப்படத்தைப் பற்றி எழுதுகையில் "அறிமுக படைப்பாளியின் பாராட்டத்தக்க முயற்சி இது" என்று குறிப்பிட்டது, இதன் உள்ளடக்கத்தைப் பற்றிய "ஒரு பிடிமானமுள்ள கதை" என்று குறிப்பிட்டது.[5]

மலை மலரின் விமர்சகர் ஒருவர் முன்னணி நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி படத்திற்கு நேர்மறையான விமர்சனம் அளித்தார்.[6] அதேபோல், தினமலர் மற்றும் ஐஃப்லிக்ஸ்.காம் ஆகியவற்றின் விமர்சகர்களும் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கினர்.[7][8]

குறிப்புகள்

தொகு
  1. "பவன் ஹீரோவாக நடிக்கும் விலாசம்! | Pawan acting as hero - movie titled Vilasam". தினமலர் - சினிமா. November 10, 2014.
  2. "Sanam gets busy in Kollywood - Times of India". The Times of India.
  3. "'Vilasam' is getting ready | Sulekha Movies" – via movies.sulekha.com.
  4. https://www.sify.com/movies/friday-fury-november-14-news-tamil-ololBmhfhdbfe.html
  5. "A Gripping Tale about Identity". The New Indian Express.
  6. "விலாசம்". maalaimalar.com. November 14, 2014.
  7. "விலாசம் - விமர்சனம்". cinema.dinamalar.com.
  8. "Vilasam". Iflicks. November 18, 2014. Archived from the original on ஆகஸ்ட் 12, 2020. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 11, 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாசம்_(திரைப்படம்)&oldid=4161153" இலிருந்து மீள்விக்கப்பட்டது