காசிமேடு கோவிந்தன்

2008 திரைப்படம்

காசிமேடு கோவிந்தன் (Kasimedu Govindan) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ரமேஷ் சஞ்சய் எழுதி இயக்கிய இப்படத்தில் ரஞ்சித் மற்றும் புதுமுகம் கரிஷ்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மனீஷ் குமார், நட்சத்திரா, நாக கண்ணன், பட்டினப்பாக்கம் ஜெயரம், ஸ்ரீகாந்த், சூர்யகாந்த், பாலு ஆனந்த், கிங் காங், அஜய் கபூர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்தை எஸ். சுந்தரம் தயாரித்தார். படத்திற்கான இசையை சௌந்தர்யன் அமைத்தார். பல தாமதங்களுக்குப் பிறகு 10 அக்டோபர் 2008 அன்று படம் வெளியிடப்பட்டது. [1] [2]

காசிமேடு கோவிந்தன்
இயக்கம்கிரிஷ்
தயாரிப்புஎஸ். சுந்தரம்
கதைஇரமேஷ் கிரிஷ்
இசைசௌந்தர்யன் (பாடல்கள்)
எஸ். பி. வெங்கடேஷ் (பின்னணி இசை)
நடிப்புரஞ்சித்
கரிஷ்மா
ஒளிப்பதிவுஎஸ். ஆர். இரவி
படத்தொகுப்புடி. உதய சங்கர்
தயாரிப்புஎஸ்.எஸ்.எஸ். பிலிம்ஸ்
வெளியீடுஅக்டோபர் 10, 2008 (2008-10-10)
நேரம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைதொகு

ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும், பார்வதி (கரிஷ்மா) ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண். அவள் ஒரு முஸ்லீம் இளைஞனைக் (மணீஷ்குமார்) காதலிக்கிறாள். அவள் தன்னுடைய கன்னித்தன்மையை கூட அவனிடம் இழக்கிறாள். அவர்கள் சென்னைக்கு ஓடிப்போய்விடுகிறார்கள். பார்வதி தனது காதலனுடன் ஓடிப்போன செய்தி காட்டுத்தீ போல பரவுகிறது, இது அவளது குடும்பத்தின் நற்பெயருக்கு அவமானத்தை விளைவிக்கிறது. இதனால் அவளது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவளது காதலன் ஒரு பயங்கரவாத அமைப்பில் சேருகிறான். காவல்துறை அவனை சுட்டுக்கொல்கிறது . சென்னையில், தங்க இடமோ, பணமோ இல்லாததால், பார்வதி பாதிக்கப்படுகிறாள். அவளை பாலியல் பலாத்காரம் செய்ய ஒரு கும்பல் முயல்கின்றது. போதைப்பொருள் கடத்துபவர்களிடம் (நாக கண்ணன், பட்டினபக்கம் ஜெயரம்) பணிபுரியும் முரடனான கோவிந்தன் ( ரஞ்சித் ) அவளை மீட்கிறான். எனவே அவள் அவனுடன் சிறிது நேரம் கடற்கரையில் தங்கியிருக்கிறாள். அப்போது கோவிந்தன் முரடர்களுடன் சண்டையிடுகிறான். அப்போது பார்வதி காயமடைகிறாள். கண்ணகி (நட்சத்திரா) என்ற நல்லமனம் படைத்த பாலியல் தொழிலாளி காயமடைந்த பார்வதியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறாள்.

அதன்பிறகு, கோவிந்தனை காவல்துறையினர் பிடிக்கின்றனர். அவனுக்கு சில காலம் சிறைத்தண்டனை கிடைக்கிறது. சிறையில் இருந்து விடுதலையானதும், அவன் ஒரு நல்ல மனிதனாக மாற முடிவு செய்து பார்வதியை திருமணம் செய்ய கனவு காண்கிறான். இதற்கிடையில், கண்ணகி கார் விபத்தில் இறக்கிறாள். இதன்பிறகு அப்பாவி பார்வதி பாலியல் தொழிலுக்காக கைது செய்யப்படுகிறாள். கோவிந்தனும் பார்வதியும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒருவருவரையொருவர் காதலிக்கிறார்கள். கோவிந்தன் மீன்பிடித் தொழிலுக்குச் செல்கிறான். காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் போதைப் பொருள் கடத்தும் கும்பல் தலைவன் கோவிந்தன் தங்களிடம் வேலைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறான். வேலைக்கு அழைத்த அவர்களை கோபத்தில் கோவிந்தன் அவமானப்படுத்துகிறான். பின்னர் போதைப் பொருள் கடத்தல் தலைவன் பிரபுக்கள் கோவிந்தனை சுட்டுக் கொல்கிறார்கள். அவர்கள் பார்வதியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் பார்வதி அவர்களை நிராயுதபாணியாக்கி சுட்டுக் கொன்றுவிடுகிறாள்.

நடிகர்கள்தொகு

 • ரஞ்சித் கோவிந்தனாக
 • கரிஷ்மா பார்வதியாக
 • மனிஷ்குமார்
 • நட்சத்திரா கண்ணகியாக
 • நாக கண்ணன்
 • பட்டிணப்பாக்கம் ஜெயராம்
 • ஸ்ரீகாந்த் சிறைக் காப்பாளராக
 • சூரியகாந்த் மீனவராக
 • பாலு ஆனந்த் வெடிமுத்துவாக
 • கிங் காங் கோவிந்தனின் நண்பனாக
 • அஜய் கப்பூர் ஜோஷாக
 • இராஜகிருஷ்ணா
 • இரவிபரத்
 • கோவிந்தன்
 • லோகேஷ்
 • பாலாஜி
 • கோஸ்
 • விஜயபதி பார்வதியின் பாட்டியாக
 • நிக்கிலா

தயாரிப்புதொகு

ரமேஷ் சஞ்சய் 2000 களின் முற்பகுதியில் நெருப்பூ என்ற திரைப்படத்தை தயாரிக்கும் வேலையைத் தொடங்கினார். இப்படத்தின் பெயரானது 2004 இல் காசிமேடு கோவிந்தன் என மாற்றப்பட்டது. கதாநாயகியாக நடிக்க கரிஷ்மா (பூர்வஜா) தேர்வு செய்யப்பட்டார். ரஞ்சித் முரடன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.. நாக கண்ணன், பட்டினபக்கம் ஜெயரம், சூர்யகாந்த், கிங் காங் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கு சௌந்தரியன் இசையமைத்தார். எஸ். ஆர். ஒளிப்பதிவை மேற்கொள்ள, டி. உதைய சங்கர் படத் தொகுப்புப் பணியை செய்தார். [3]

இசைதொகு

படத்திற்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தரியன் மேற்கொண்டார். 2001 இல் வெளியான இந்த படத்தின் இசைப்பதிவில், சௌந்தர்யன், சினேகன், கதிரவன் ஆகியோரால் எழுதப்பட்ட பாடல் வரிகளுடன் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன. [4] [5]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "ஆனந்தநாதன்" பி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா 5:47
2 "பீடா மாவா" ஹரிஷ் ராகவேந்திரா 5:11
3 "எந்தப் பூக்களும்" துரை பாண்டியன் 5:09
4 "மொட்டு வெடிக்கிறது" ஹரிணி 6:42
5 "பச்சைக்கிளி" ராஜ் தர்மன், கோபிகா பூர்ணிமா, கல்பனா 4:03

குறிப்புகள்தொகு

 1. "Kasimedu Govindhan (2008)". gomolo.com. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. "Jointscene : Tamil Movie Kasimedu Govindhan". jointscene.com. 4 February 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Ranjith's "Kasimedu Govindhan"". behindwoods.com. 11 March 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Nerupoo (2001) - Soundaryan". mio.to. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Nearupoo Songs". jiosaavn.com. 18 March 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிமேடு_கோவிந்தன்&oldid=3398154" இருந்து மீள்விக்கப்பட்டது