பரமசிவன் (திரைப்படம்)

பி. வாசு இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பரமசிவன் (Paramasivan) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2006 சனவரி 14 பொங்கல் அன்று வெளியானது.[1][2]

பரமசிவன்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புரமேஷ்
இசைவித்யாசாகர்
நடிப்புஅஜித்
லைலா
நாசர்
பிரகாஷ்ராஜ்
விவேக்
ஜெயராம்
அவினாஷ்
ரகசியா
ஒளிப்பதிவுசேகர் வி. ஜோசப்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
வெளியீடு2006
ஓட்டம்165 நிமிடங்கள்.
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது - இங்கே முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த தமிழகத்தில் தங்களது தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த சிலரே அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான வழியில் தீவிரவாதிகளை அடக்க முற்பட்டால் தன் துறையைச் சேர்ந்தவர்களே அதற்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதும் பிரகாஷ்ராஜ் இதற்காக தூக்கு தண்டனை கைதியான அஜித்தை தேர்ந்தெடுக்கிறார்.

அஜித்திற்கு ஏன் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் - நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தன் தந்தை ராஜேஷையும் தன் தங்கையையும் தீவிரவாதிகளுக்கு உதவும் சில காவல்துறை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து கொள்ளும் அஜித் அந்த அதிகாரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்.. அதனால்தான் அவருக்க் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் அஜித்தை சாமர்தியமாக தன்னுடைய உயர் அதிகாரியின் துணையுடன் தப்பிக்க வைக்கிறார். தான் போட்ட திட்டம் நல்லபடியாக முடிந்தவுடன் அஜித்தை தானே கொன்று விடுவதாக தன் உயர் அதிகாரியிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.

ஊட்டியில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் அஜித் பிரகாஷ்ராஜ் கூறும் அனைத்து வேலைகளையும் முடிக்கிறார். இதற்கிடையே ராசியில்லாத பெண் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்ட லைலாவுடன் காதல். ஒருவழியாக பிரகாஷ்ராஜ் சொன்னபடி தீவிரவாதிகள் அனைவரையும் வெற்றிகரமாக அஜித் தீர்த்து கட்டிவிட்டு லைலாவுடன் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிற வேளையில் அவர் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். அதிர்ந்து போகிறார்கள் லைலாவும் அஜித்தும். அஜித்தின் நிலை என்ன என்பதுதான் படத்தின் முடிவு.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

பரமசிவன்
திரைப் பாடல்கள்
வெளியீடு2006
இசைத் தயாரிப்பாளர்வித்யாசாகர்
வித்யாசாகர் காலவரிசை
'தம்பி
(2006)
பரமசிவன் 'ஆதி
(2006)
பாடல் பாடியவர்கள்
1 ஒரு கிளி மது பாலகிருஷ்ணன், சுஜாதா மோகன்
2 ஆசை தோசை பிரியா சுப்பிரமணியம்
3 கண்ணன் கல்யாணி மேனன், சைந்தவி, லட்சுமி, ரங்கராஜன்
4 நட்சத்திர பறவைக்கு திப்பு, ராஜ லெட்சுமி
5 தங்கக்கிளி ஒன்னு மது பாலகிருஷ்ணன், கோபிகா பூர்ணிமா, ஸ்ரீவர்த்தினி
6 உண்டிவில்ல சங்கர் மகாதேவன், மாலதி லெட்சுமணன்
7 வந்தே மாதரம் சங்கர் மகாதேவன், கார்த்திக், திப்பு, சந்திரன், ரஞ்சித்
8 தீம் இசை -

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமசிவன்_(திரைப்படம்)&oldid=3710261" இலிருந்து மீள்விக்கப்பட்டது