பிரகாஷ் ராஜ்

இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
(பிரகாஷ்ராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரகாஷ் ராஜ் (Prakash Raj, பிறப்பு:26 மார்ச்சு 1965) என்பவர் இந்தியத் திரைப்பட திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பிரகாஷ் ராஜ்

இயற் பெயர் பிரகாஷ் ராய்
பிறப்பு 26 மார்ச்சு 1965 (1965-03-26) (அகவை 59)
பெங்களூரு, கர்நாடகா, இந்தியா இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்,
இயக்குநர்,
தயாரிப்பாளர்
நடிப்புக் காலம் 1991 - இன்றுவரை
துணைவர் லலிதா குமாரி
(1994 - 2009 மணமுறிவு)
போனி வர்மா
(2010 - தற்போதும்)
குறிப்பிடத்தக்க படங்கள் காஞ்சிவரம், கில்லி, ஆசை

இவர் தனது காஞ்சிவரம் தமிழ்த் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிரகாஷ் ராஜ் பெங்களூரில் 26 மார்ச் 1965 அன்று ஒரு துளு தந்தைக்கும் மற்றும் கன்னட தாய்க்கும் மகனாக பிறந்தார். இவரது சகோதரர் பிரசாத் ராஜ் அவரும் ஒரு நடிகர் ஆவார்.[2] இவர் தனது பள்ளிப்படிப்பை புனித ஜோசப் இந்திய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதன் பிறகு தனது உயர் நிலைப்படிப்பை பெங்களூர் புனித ஜோசப் வணிகக் கல்லூரியில் பயின்றார். பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் ஆலோசனையின் பேரில் பிரகாஷ் ராஜ் தனது குடும்பப் பெயரை 'ராஜ்' என்று மாற்றினார். இன்னும் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் பிரகாஷ் ராய் என்று அழைக்கப்படுகிறார்.[3]

இவர் 1994 இல் நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார்.[4][5] அவர்களுக்கு மேகனா மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தனர். 2009 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று[6] ஆகஸ்ட் 24, 2010 அன்று நடன இயக்குனர் போனி வர்மாவை மணந்தார்.[7] இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.[8][9]

திரைப்படங்கள்

தொகு

தெலுங்கு

தொகு

தமிழ்

தொகு

இந்தி

தொகு

அரசியல் வாழ்க்கை

தொகு

2017 செப்டம்பரில் தன் தோழி கௌரி லங்கேசு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு சமூக ஊடகங்களில் #justasking என்ற ஹேஷ்டேக்குடன் தனது தீவிர அரசியல் இயக்கத்தை பிரகாஷ் ராஜ் தொடங்கினார்.

இவர் 2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.[10][11] தேர்தலில் பிரகாஷ் ராஜ் 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.[12] பாசகவின் பி. சி. மோகன் 602,853 வாக்குகளையும் காங்கிரசின் ரிசுவான் அர்சத் 531,885 வாக்குகளையும் பெற்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Southern films score big at National Awards". தி இந்து. 7 செப்டம்பர் 2009. Archived from the original on 10 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2009. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archive-date= (help)
  2. Prakash Raj's brother debuts in Kollywood – Tamil Movie News. Indiaglitz.com (23 September 2010). Retrieved on 10 June 2014.
  3. "Prakash Raj: Not getting Hindi film offers after criticising Modi | Bengaluru News - Times of India". The Times of India.
  4. "Prakashraj and Pony Verma get married". Thaindian News. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  5. "Actor Prakash Raj's son dies". The Times of India. 21 March 2004 இம் மூலத்தில் இருந்து 2012-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120701131932/http://articles.timesofindia.indiatimes.com/2004-03-21/hyderabad/28342135_1_sidhu-actor-prakash-raj-chennai. 
  6. "Prakash Raj Granted Divorce". Yahoo! India. 19 November 2009 இம் மூலத்தில் இருந்து 23 November 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091123082954/http://in.movies.yahoo.com/news-detail/71841/Prakashraj-granted-divorce.html. 
  7. "Prakash Raj marriage with Pony Verma". www.supergoodmovies.com. Archived from the original on 27 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2013.
  8. "Little hero Vedhanth, big villain Prakash Raj - Telugu News". IndiaGlitz.com. 13 October 2016.
  9. "Cute Vedanth's picture - Andhra Headlines". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
  10. "Prakash Raj gets 'whistle' symbol from Bengaluru Central, urges citizens to be 'whistleblowers'", Times Now, 29 March 2019, archived from the original on 1 April 2019, பார்க்கப்பட்ட நாள் 1 April 2019
  11. "Prakash Rai files nomination from Bengaluru Central". Deccan Herald. 22 March 2019. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2019.
  12. "Election results: Prakash Raj calls defeat in Bangalore Central a "solid slap on my face"". www.businesstoday.in. 23 May 2019. Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகாஷ்_ராஜ்&oldid=4035924" இலிருந்து மீள்விக்கப்பட்டது