கௌரி லங்கேசு

கௌரி லங்கேசு (Gauri Lankesh, கௌரி லங்கேஷ், 1962 – 5 செப்டம்பர் 2017) என்பவர் ஒரு இந்தியப் பெண் பத்திரிகையாளரும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் லங்கேசு பத்ரிகே என்ற கன்னட இதழின் முதன்மை ஆசிரியராகப் பணி புரிந்தார். ராணா அய்யூப் எழுதிய புத்தகமான 'குஜராத் ஃபைல்ஸ்' நூலை கன்னடத்தில் மொழி பெயர்த்தார். முற்போக்குக் கொள்கையுடன் மதம், சாதி, இந்துத்துவாக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக எழுதி வந்தார். அதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 2017 செப்டம்பர் 5 ஆம் திகதியில் பெங்களூருவில் அடையாளம் தெரியாத சில நபர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.[1] இவருடைய தந்தையார் பி. லங்கேசு ஒரு கன்னடக் கவிஞரும் பத்திரிகையாளரும் ஆவார்.

கௌரி லங்கேஷ்
Gauri Lankesh
பிறப்பு1962
இறப்பு5 செப்டம்பர் 2017(2017-09-05) (அகவை 55)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
பணிபத்திரிக்கையாளர்-செயற்பாட்டாளர்

கொலையின் எதிர் விளைவுகள்தொகு

இந்தக் கொலை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுனெசுகோ அமைப்பு கௌரி லங்கேசுவின் படுகொலையைக் கண்டித்துள்ளது. பேச்சுரிமையான அடிப்படை உரிமை பாதுக்காகப் படவேண்டும் என்றும் கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யுனெசுகோ கூறியுள்ளது.[2]

செயல்பாடுகள்தொகு

பாபா புதன்  கிரி போராட்டத்தை முன்னின்று நடத்தினார். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். தீவிரவாதிகளான நக்சல்பாரிகளைச் சனநாயக அரசியல் அரங்கில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். அம்பேத்கர் மற்றும் பசவன்னா சென்ற நெறிகளில் தாமும் இயன்ற வரை செயல்படுவதாகக் கூறி வந்தார்.[3]

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_லங்கேசு&oldid=2715015" இருந்து மீள்விக்கப்பட்டது