மிஸ்டர். பர்பெஃக்ட் (2011 திரைப்படம்)

மிஸ்டர். பர்ஃபெக்ட் (Mr. Perfect) என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு திரைப்படம். இதை தசரத் குமார் இயக்கியுள்ளார். பிரபாஸ், காஜல் அகர்வால், டாப்சி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். முரளி மோகன், பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே, நாசர், விஸ்வநாத் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தில் ராஜ் தயாரிப்பில், அப்பூரி ரவி எழுத்தில் உருவானது.[1] இப்படம் 22 ஏப்பிரல், 2011 அன்று வெளியானது. இதே ஆண்டில், சிறந்த குடும்பப் பாங்கான தெலுங்கு திரைப்படத்திற்கான பொம்மிரெட்டி நாகிரெட்டி நினைவு விருதைப் பெற்றது.[2] In 2013 பின்னர், இந்தியிலும், நம்பர் ஒன் மிஸ்டர் பர்ஃபெக்ட் என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.[3]

மிஸ்டர். பர்ஃபெக்ட்
இயக்கம்தசரத்
தயாரிப்புதில் ராஜு
கதைஅப்பூரி ரவி, கே. எஸ். ரவீந்திரா
இசைதேவி ஸ்ரீ பிரசாத்
நடிப்புபிரபாஸ்
காஜல் அகர்வால்
தாப்சி
கே. விஸ்வநாத்
பிரகாஷ் ராஜ்
சாயாஜி சிண்டே
ஒளிப்பதிவுவிஜய் சி சக்கரவர்த்தி
படத்தொகுப்புசிவ பிரசாத்
கலையகம்ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்சு
விநியோகம்தில் ராஜு
வெளியீடுஏப்ரல் 22, 2011 (2011-04-22)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
மொத்த வருவாய்750 மில்லியன் (US$9.4 மில்லியன்)

கதை தொகு

கதாநாயகனான விக்கி, ஆசுத்திரேலியாவில் உள்ள வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகின்றான். இளவயதில் இருந்தே தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றான். பிறருக்காக ஒருவர் தன்னை மாற்றிக் கொள்வதை வெறுக்கிறான். அவன் தந்தை, அனுசரித்து நடக்குமாறு கூறுகிறார். ஏற்க மறுக்கிறான் விக்கி. இந்தியாவில், தனக்கும், நாயகி பிரியாவுக்கும் திருமணம் நிச்சயித்துள்ளதை அறிகிறான். சிறுவயதிலேயே ஒருவருக்கு ஒருவரை பிடிக்காது. இருவருமே திருமணத்தை நிறுத்தும் முடிவில் இருக்கின்றனர். சில நாட்களில், இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. பிரியா கிராமத்தில் இயற்கைச் சூழலில் வாழ்ந்தவள், விட்டுக்கொடுக்கும் பழக்கம் கொண்டவள். விக்கி, நகரத்துச் சூழலில் வளர்ந்தவன். தனக்காக பிரியா, அவள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதை விரும்பவில்லை. பிரியா மீது காதல் இருந்தாலும், நடைமுறையில் இருவரும் இணைவது சாத்தியமில்லை என்கிறான் விக்கி. ஆசுத்திரேலியா திரும்புகிறான். அங்கே, கேட்பரி நிறுவனம் நடித்திய ஆய்வில், இவனுக்கும் மேகிக்கும் ஒரே விதமான பழக்கவழக்கங்களும், விருப்பங்களும் இருப்பதை அறிகிறான். இருவரும் காதலிக்கின்றனர். மேகியின் தந்தைக்கு விக்கியைப் பிடிக்கவில்லை. தன் இளைய மகள் திருமணத்தின்போது இரு உறவினர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்கிறான். வென்றால், தன் மகளைத் திருமணம் செய்து வைப்பதாகவும், தோற்றால் இடத்தைவிட்டு நீங்க வேண்டும் என்றும் கூறுகிறார். சவாலை ஏற்றுக் கொண்டு, திருமணத்திற்கு வருகிறான் விக்கி. பிரியா, மணமகனின் உறவினராக கலந்துகொள்கிறாள். எல்லோர் மனதிலும் இடம்பிடிக்கிறான் விக்கி. அவனை வாழ்த்திவிட்டு, வருத்தத்துடன் இந்தியா திரும்புகிறாள் பிரியா. விக்கி, பிரியாவின் காதலை, தன் முந்தைய பிறந்தநாளன்று அவள் பதிவுசெய்திருந்த செய்தியின் மூலம் கண்டு, மனம் மாறுகிறான். அவளை காயப்படுத்தியது அறிந்து, மேகியின் குடும்பத்தினரிடம் அதைக் கூறி, மேகி வேண்டாம் என்கிறான். மேகியின் குடும்பத்தினர், மேகி உட்பட மனம்திருந்தி, விக்கியின் செய்தியைக் கேட்டு, அவனை வாழ்த்தி அனுப்புகின்றனர். இந்தியாவிற்கு திரும்பி, பிரியாவுடன் இணைகிறான் விக்கி.

நடிப்பு தொகு

பாடல்கள் தொகு

தேவிஸ்ரீ பிரசாத், பாடல்களுக்கு பின்னணி இசையமைத்துள்ளார். [4]

மிஸ்டர். பர்ஃபெக்ட்
இசைக்கோவை
தேவி ஸ்ரீ பிரசாத்
வெளியீடு19 March 2011
இசைப் பாணிதிரைப்படப் பாடல்
இசைத்தட்டு நிறுவனம்ஆதித்யா மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத்
தேவி ஸ்ரீ பிரசாத் காலவரிசை
'மன்மதன் அன்பு
(2010)
மிஸ்டர். பர்ஃபெக்ட் '100% லவ்
(2011)
# பாடல்வரிகள்பாடகர்கள் நீளம்
1. "ரவ் கரி அப்பை"  அனந்த ஸ்ரீராம்திப்பு, மேகா 4:44
2. "சளி சளிகா"  அனந்த ஸ்ரீராம்சிரேயா கோசல் 4:57
3. "நிங்கி ஜாரிபத்தா"  ராமஜோகய்யா சாஸ்திரிமல்லிகார்ஜுன் 1:46
4. "டோல் டோல் டோல் பாஜே"  Balajiஎமெலார். கார்த்திகேயன் , அனிதா 4:32
5. "மோரா வினாரா"  சத்யமூர்த்திபிரியதர்சினி 2:23
6. "ஆகாசம் பதலைனா"  அனந்த ஸ்ரீராம்சாகர், மேகா 4:08
7. "அக்கிபுல்ல லண்டி"  ராமஜோகய்யா சாஸ்திரிகோபிகா பூர்ணிமா 1:53
8. "பதுலு தோசனை"  சிரிவென்னெலா சீதாராமசாஸ்திரிகார்த்திக், மல்லிக்கார்ஜுன் 4:11
9. "லைட் தீஸ்கோ"  ராமஜோகய்யா சாஸ்திரிபாபா சேகல், முரளி 4:25

விருதுகள் தொகு

  • தென்னிந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருது (சுருக்கமாக ”சீமா”) - சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது, ”சளி சளிகா” என்ற பாடலுக்காக சிரேயா கோசலுக்கு வழங்கப்பட்டது.
  • ஐதராபாத் டைம்சு திரைப்பட விருதுகள் - சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது, ”சளி சளி” என்ற பாடலுக்காக சிரேயா கோசலுக்கு வழங்கப்பட்டது.
  • சந்தோசம் திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகைக்கான விருது - டாப்சி பன்னு [5]
  • நாகி ரெட்டி விருதுகள் - 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த குடும்பப்பாங்கான தெலுங்கு திரைப்படம்.

சான்றுகள் தொகு

  1. "Mr Perfect Telugu Movie (2011), Mr Perfect Movie Review, Mr Perfect Movie Release Date, Trailer, Rating". Altiusdirectory.com. Archived from the original on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  2. "Mr. Perfect wins Nagireddy award". 123telugu.com. 1 January 1998. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  3. "Mr Perfect Dubbed in Hindi". Southy Mania. பார்க்கப்பட்ட நாள் 22 July 2013.
  4. "The Hyderabad Times Film Awards 2011". 24 June 2012 இம் மூலத்தில் இருந்து 2013-07-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130718191108/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-24/news-interviews/32382769_1_mahesh-babu-tamannaah-video. 
  5. "Taapsee bagged santhosham special jury award". idlebrain. 19 September 2012. http://www.idlebrain.com/news/functions/santoshamawards2012.html. 

இணைப்புகள் தொகு