பம்பாய் (திரைப்படம்)

மணிரத்னம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பம்பாய் (Bombay) திரைப்படம் (1995)ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினாலும் உண்மைச்சம்பவங்களினாலும் பின்னப்பட்ட கற்பனைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பம்பாய்
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
S. Sriram
கதைமணிரத்னம்
உமேஷ் சர்மா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புஅரவிந்த் சாமி
மனிஷா கொய்ராலா
தின்னு ஆனந்த்
நாசர்
சோனாலி பிந்த்ரே
பிரகாஷ் ராஜ்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடுஏப்ரல் 7 1995
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நாடகப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இந்து சமயத்தைச் சேர்ந்தவனான சேகர் (அரவிந்த் சாமி) பம்பாயிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தனது பெற்றோர்களைச் சந்திப்பதற்காக வருகின்றார். அங்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைலா பானு (மனிஷா கொய்ராலா)வைச் சந்திக்கின்றார். அவர் மீது காதலும் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இவரைக் கண்டு கொள்ளாத சைலா பின்னர் அவரைக் காதலிக்கின்றார். இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார். அவ்வாறு இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவிக்கின்றார். இதனைப் பொருட்படுத்தாத சேகர் தனது காதலியான சைலா பானுவை அழைத்துக் கொண்டு பம்பாய் செல்கின்றார். அங்கு அவரைத் திருமணமும் செய்து கொள்கின்றார். பின்னர் இரு மகன்களைப் பெற்றவர்களைக் காண்பதற்காக இருவரின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்கின்றனர். இரு குடும்பத்தாரும் நல்லுறவைப் பேணவும் செய்கின்றனர். அச்சமயம் அங்கு ஏற்படும் இந்து, இஸ்லாமியக் கலவரத்தின் போது சேகரின் குழந்தைகள் காணாமல் போய்விடுகின்றனர். அங்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் ஏற்படும் தீயினால் இறந்து விடுகின்றனர். பின்னர் இக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமது இரு குழந்தைகளையும் தேடிச் செல்லும் சேகரும் பானுவும் குழந்தைகளைக் காண்கின்றனர். பின்னர் அங்கு சமாதானம் நிலவியதா என்பதே கதையின் முடிவு.

விருதுகள்

தொகு

1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா)

1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது - சிறந்த தொகுப்பாளர்- சுரேஷ் எர்ஸ்
  • வென்ற விருது - நார்கிஸ் டத் விருது- சிறந்த திரைப்படம் - பம்பாய் - மணிரத்னம்

1995 பில்ம்பேர் விருது (இந்தியா)

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து இயற்றியிருந்தார்.

  • அந்த அரபிக் கடலோரம் - ஏ. ஆர். ரகுமான்
  • பூவுக்கு என்ன- நோல், அனுபமா
  • உயிரே உயிரே- ஹரிஹரன், கே. எஸ். சித்ரா
  • குச்சி குச்சி - ஹரிஹரன், சுவர்ணலதா
  • கண்ணாளனே - கே. எஸ். சித்ரா
  • பம்பாய் ஆரம்ப இசை- ஏ. ஆர். ரகுமான்

துணுக்குகள்

தொகு
  • இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது.
  • பம்பாய் ஆரம்ப இசையானது ஆங்கிலத்திரைப்படமான லோஎட் ஒஃவ் வார் என்ற திரைப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாய்_(திரைப்படம்)&oldid=3660406" இலிருந்து மீள்விக்கப்பட்டது