சோனாலி பேந்திரே

தமிழ்த் திரைப்பட நடிகர்
(சோனாலி பிந்த்ரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோனாலி பேந்திரே (Sonali Bendre Behl) (மராத்தி: सोनाली बेंद्रे, 1 ஜனவரி 1975 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நடிகை மற்றும் மாதிரியுரு ஆவார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார், மேலும் மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[1]

சோனாலி பேந்திரே

பிறப்பு சனவரி 1, 1975 (1975-01-01) (அகவை 49)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தொழில் நடிகை,
விளம்பர அழகி
தொலைக்காட்சி தொகுப்பாளர்
நடிப்புக் காலம் 1994 - 2013
துணைவர் கோல்டி பெல்
பிள்ளைகள் ரான்வீர் பெல்
பெற்றோர் சித் பேந்த்ரே (தந்தை)
ரூப்சி பேந்த்ரே (தாய்)

சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

சோனாலி பேந்த்ரேவின் தாயார் ரூப்சி பேந்த்ரே, தந்தை சித் பேந்த்ரே ஆவர்.[2] சோனாலி பேந்த்ரே பெங்களூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார் மற்றும் மும்பையில் உள்ள ராம்நரேன் ரூயா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரி நாட்களில், அவர் மாடலிங்கில் இறங்கினார் மற்றும் ஸ்டார் டஸ்ட் டேலண்ட் தேடலில் (Star Dust Talent Search) வெற்றி பெற்றதன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.[3] 12 நவம்பர் 2002 இல், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்டார்.[4] 9 ஆகஸ்ட் 2005 இல், ப்ரீச் கேண்டி மருத்துவமனையில், ரான்வீர் பெல் என்கிற அவரது மகனைப் பெற்றெடுத்தார்.[5]

தொழில்

தொகு

கல்லூரி நாட்களில், விளம்பர மாதிரியுறருவாக பணியாற்றினார். மற்றும் ஸ்டார் டஸ்ட் டேலண்ட் தேடலில் (Star Dust Talent Search) வெற்றி பெற்றதன் மூலம் அங்கீகாரத்தை பெற்றார்.[6] மும்பைக்கு சென்ற சோனாலி, திரைப்படத் துறையின் பல்வேறு சிறந்த நடிகர்கள் மற்றும் திறமையாளர்களிடம் இருந்து பயிற்சி பெற்றார். 1994 இல் வெளியான ஆக் என்ற திரைப்படத்தில் கோவிந்தாவிற்கு ஜோடியாக சோனாலி முதல் முறையாக கதாநாயகியாகத் தோன்றினார்.[7]

சோனாலியின் பல திரைப்படங்களுள் பாய் (1997), முராரி (தெலுங்குத் திரைப்படம்), சர்ஃபரோச் , சம்கம் , டூப்ளிகேட் , காதலர் தினம் (தமிழ்த் திரைப்படம்) , கம் சாத்-சாத் கெயின் (1999), தேரா மேரா சாத் ரகே மற்றும் அனாகட் (2003) போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார்.[8]

அமீர் கான், சாருக் கான், சையிஃப் கான் மற்றும் சல்மான் கானுடனும் ஜோடியாக நடித்தார். அக்சய் குமார், சுனில் செட்டி, அஜய் தேவ்கான், சஞ்சய் தத் மற்றும் அனில் கபூர் போன்ற பாலிவுட்டின் பிற பெரிய நடிகர்களுடனும் சோனாலி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவரது நடிப்புத் திறமைகள் நன்றாக கவனிக்கப்பட்டதன் காரணமாக, கத்தார் (1995), சபூட் , பம்பாய் , லச்சா மற்றும் மேஜர் சாப் போன்ற சிலத் திரைப்படங்களின் நேர்த்தியாக நடனத்தை வெளிப்படுத்தினார். ஆப் கி சோனியா என்றழைக்கப்பட்ட அரங்க நாடகத்திலும் பேந்த்ரே நடித்தார்.[9][10][11]

கியா மஸ்தி கியா தூம் என்று பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கினார்.[12] மேலும் இப்போது சோனி பொழுதுபோக்குத் தொலைக்காட்சியின் இந்தியன் ஐடால் என்ற நிகழச்சியின் நடுவர்களில் ஒருவராக பங்கேற்றார். 2003 இல், கரன் ஜோஹரால் தயாரிக்கப்பட்ட கல் ஹோ நா ஹோ வில் ஷாருக் கானின் மருத்துவராக பேந்த்ரே சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.

சையிஃப் அலிக் கான் மற்றும் பிரீத்தி சிந்தா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.[13] 26 பிப்ரவரி 2005 இல், சைப் அலிகான் மற்றும் பஃரீதா ஜலால் ஆகியோருடன் 50வது ஃபிலிம் ஃபேர் விருதுகளை பேந்த்ரே தொகுத்து வழங்கினார். பேந்த்ரே தற்போது இந்தியன் ஐடால் 4 மற்றும் இந்தியா'ஸ் காட் டேலண்ட் ஆகிய நிகழ்ச்சிகளின் நடுவராக பங்கேற்றார் .

விருதுகள்

தொகு

1995 இல், ஃபிலிம் ஃபேர் லக்ஸ் புதுமுக விருதை பேந்த்ரே வென்றார்.[14]2001 இல், அனில் கபூர் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருடன் இணைந்து நடித்த அமாரா தில் ஆப்கே பாசு கே திரைப்படத்தில் பேந்த்ரேவின் சிறந்த நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான நட்சத்திரத் திரை விருதை அவர் வென்றார்.[15]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் மொழி இதர குறிப்புகள்
1994 ஆக் (தீ ) [16] இந்தி வெற்றி , ஃபிலிம்பேர் லக்ஸ் புதுமுக விருது
1994 நாராஸ் (கோபம்) [17] இந்தி
1995 த டான் [18] இந்தி
1995 கத்தார் [19] இந்தி
1995 டக்கர் (மோதல் ) [20] இந்தி முதல் எதிர்மறையான பாத்திரம்
1995 பம்பாய் [21] தமிழ் சிறப்புத் தோற்றம்
1996 ரக்சக் (காவலன் ) [22] இந்தி
1996 இங்கிலீஷ் பாபு தேசி மேம் [23] இந்தி
1996 தில்ஜலே[24] இந்தி
1996 அப்னே தம் ஃபர் [25] இந்தி சிறப்புத் தோற்றம்
1996 சபூத் (மகன் ) [26] இந்தி
1997 பாயி (சகோதரன்) [27] இந்தி
1997 தராசு [28] இந்தி
1997 கஹர் [29] இந்தி
1998 கீமத் [30] இந்தி
1998 டூப்ளிகட் [31] இந்தி
1998 ஹம் செ பட்கர் கௌன் [32] இந்தி
1998 மேஜர் சாப் [33] இந்தி
1998 அங்காரே (தீக்கதிர்கள்) [34] இந்தி
1998 ஜக்ம் [35] இந்தி
1999 லவ் யூ ஹமேஷா [36] இந்தி 2006 இல் வெளியிடப்பட்டது
1999 காதலர் தினம் [37] தமிழ் தில் ஹி தில் மெய்ன் என்ற இந்தித் திரைப்படமாக மறுதயாரிப்பு செய்யப்பட்டது
1999 கண்ணோடு காண்பதெல்லாம் [38] தமிழ்
1999 ஹம் சாத்-சாத் கைம் [39] இந்தி
1999 தகத் [40] இந்தி
1999 சர்ஃப்ரோசு [41] இந்தி
2000 தில் கி தில் மெய்ன் [42] இந்தி
2000 கமாரா தில் ஆப்கே பாசு கை [43] இந்தி
2000 டாயி அக்‌சர் ப்ரேம் கே [44] இந்தி சிறப்புத் தோற்றம்
2000 ஜிஸ் தேஸ் மே கங்கா ரக்தா கை [45] இந்தி
2000 பிரீத்ஸ் [46] கன்னடம்
2001 முராரி [47] தமிழ் மற்றும் தெலுங்கு தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.
2001 லவ் கே லியே குச் பி கரேங்கா [48] இந்தி
2001 லஜ்ஜா [49] இந்தி 'முஜே சாஜன் கெ கர் ஜானா ஹை' என்ற பாடலுக்கான சிறப்புத் தோற்றம்
2001 தேரா மேரா சாத் ரஹேன் [50] இந்தி
2002 இந்திரா [51] தெலுங்கு
2002 கத்கம் (வாள்) [52] தெலுங்கு
2002 மன்மதுடு [53] தெலுங்கு
2003 அநாஹத் (காயமில்லாமல்) [54] மராத்தி
2003 பல்நாட்டு பிரம்மநாயுடு [55] தெலுங்கு
2003 சோரி சோரி [56] இந்தி
2003 கல் ஹோ நா ஹோ [57] இந்தி சிறப்புத் தோற்றம்
2004 சங்கர் தாதா எம்.பி.பி.எஸ் [58] தெலுங்கு
2004 அக பாய் அரேச்சா! [59] மராத்தி சிறப்புத் தோற்றம்
2013 ஒன்ஸ் அபான் அ டைம் மும்பை எகய்ன் [60] இந்தி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தொகு
  • கியா மஸ்தி கியா தூம் (நிகழ்ச்சி தொகுப்பாளர்) [61]
  • மிஸ்டர் & மிஸ் டிவி (நடுவர்)[62]
  • இந்தியன் ஐடால் 4 (நடுவர்)[63]
  • கலர்ஸ் டிவி இன் இந்தியா'ஸ் காட் டேலண்ட் (நடுவர்)[64]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sonali Bendre". Times of India. 1975-01-01. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  2. "Baby boy for Sonali Bendre". Zee5. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  3. "A Look At Bollywood's 'Golden Girl' Sonali Bendre's Inspirational Journey". News 18. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
  4. "bollyvista.com". Sonali Bendre's set to tie the knot!. Archived from the original on 8 January 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2007.
  5. "bollyvista.com". It's a boy for Sonali. Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 9 August 2007.
  6. "A Look At Bollywood's 'Golden Girl' Sonali Bendre's Inspirational Journey". News18. 2024-01-02. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  7. "Sonali Bendre". filmyfocus.com. 2023-11-09. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  8. "SUPER-HIT SONG A 1,000 TIMES WHEN IT RELEASED IN 99 BUT DID YOU MAKE THE LEKHA WASHINGTON CONNECT?". filmyfocus.com. 2020-08-24. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  9. "deccanherald.com". Sonali Bendre's to star in the theatre. பார்க்கப்பட்ட நாள் 9 August 2007.
  10. "Full Cast & Crew: Bombay (1995)". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  11. "About: Gaddaar (1995 film)". dbpedia.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  12. "Kya Masti Kya Dhum". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  13. http://indiafm.com/movies/cast/7013/index.html பரணிடப்பட்டது 2008-04-30 at the வந்தவழி இயந்திரம் Indiaf.com
  14. "Filmfare Awards". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  15. "Awards". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  16. "Aag". IMBD. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  17. "Full Cast & Crew". IMBD. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  18. "The Don". Letterboxd.co. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  19. "About: Gaddaar (1995 film)". dbpedia.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  20. "TAKKAR". boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  21. "Full Cast & Crew: Bombay (1995)". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  22. Chopra, Anupama (2013-06-12). "Movie review: Rakshak, starring Sunil Shetty, Karisma Kapoor, Sonali Bendre". India Today. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  23. "English Babu Desi Mem". archive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  24. "Diljale Cast & Crew". archive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  25. "APNE DAM PAR". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  26. "Sapoot". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  27. "BHAI". boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  28. "TARAZU". boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  29. "QAHAR". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  30. "KEEMAT". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  31. "Duplicate". archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  32. "Humse Badhkar Kaun". rottentomatoes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  33. "Major Saab", IMDB (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-10-09
  34. "ANGAARAY". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  35. Kanabar, Ankita (2023-03-15). "Pooja Bhatt recalls wearing her grandmother's saree and mangalsutra in 'Zakhm' as the film was based on Mahesh Bhatt's mother's life - Exclusive!". India Times. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  36. "Love You Hamesha". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  37. "SUPER-HIT SONG A 1,000 TIMES WHEN IT RELEASED IN 99 BUT DID YOU MAKE THE LEKHA WASHINGTON CONNECT?". filmyfocus.com. 2020-08-24. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  38. "Kannodu Kanbathellam". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  39. "Hum Saath-Saath Hain". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  40. "DAHEK". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  41. "SARFAROSH". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  42. "Dil Hi Dil Mein Movie Reviews". mouthshut.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  43. "HAMARA DIL AAPKE PAAS HAI". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  44. "DHAAI AKSHAR PREM KE". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  45. "Move over, David Dhawan. Enter Mahesh Manjrekar!". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  46. Riti, M D. "Mindless entertainment!". rediff.co. பார்க்கப்பட்ட நாள் 2024-10-09.
  47. Vijayasarathy, R G (2006-03-07). "Gopi: Even Murali fails to save it". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  48. "LOVE KE LIYE KUCH BHI KAREGA". boxofficeindia. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  49. "LAJJA". boxofficeindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  50. "Tera Mera Saath Rahen". bollywoodhungama.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  51. "Indra". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  52. "Full Cast & Crew: Khadgam (2002)". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  53. "Manmadhudu Pressmeet on 5th December". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  54. "Anaahat". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  55. "Juke Box - Palanati Brahmanaidu". archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  56. "Chori Chori Box Office". bollywoodgungama.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  57. "Full Cast & Crew: Kal Ho Naa Ho (2003)". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  58. "Shankar Dada MBBS". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  59. "Full Cast & Crew: Aga Bai Arecha (2004)". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  60. "Once Upon a Time in Mumbaai Dobara". imdb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  61. "Kya Masti Kya Dhum". IMDb.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.
  62. Singha, Bidisha (2008-04-30). "Sonali Bendre to judge Indian Idol 4". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  63. Singha, Bidisha (2008-04-30). "Sonali Bendre to judge Indian Idol 4". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-11.
  64. "India's Got Talent". en.m.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 2024-10-10.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாலி_பேந்திரே&oldid=4122214" இலிருந்து மீள்விக்கப்பட்டது