ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ஆர். கண்ணன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா 2014 ஆவது ஆண்டில் ஆர். கண்ணன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்த இத்திரைப்படத்தில் விமல், பிரியா ஆனந்த், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், நாசர், அனுபமா குமார், தம்பி ராமையா ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். டி. இமான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 2014 நவம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியானது.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | |
---|---|
இயக்கம் | ஆர். கண்ணன் |
தயாரிப்பு | எஸ். மைக்கேல் ராயப்பன் எம். செராபின் சேவியர் ஆர். கண்ணன் |
கதை | ஆர். கண்ணன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விமல் பிரியா ஆனந்த் சூரி |
ஒளிப்பதிவு | பி. ஜி. முத்தையா |
படத்தொகுப்பு | சதீஷ் சூர்யா |
கலையகம் | கண்ணன் பிக்சு |
விநியோகம் | குளோபல் இன்போடெயின்மெண்ட் |
வெளியீடு | 7 நவம்பர் 2014 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விமல் - தினேசு
- பிரியா ஆனந்த் - உதய பிரியா
- சூரி - மைக்கேல்
- நாசர் - கார்த்தி
- தம்பி ராமையா
- அனுபமா குமார் - சந்திரிகா
- விசாகா சிங் - கல்பனா (சிறப்புத் தோற்றம்)
- பாலா சிங் - பிரியாவின் தந்தை
- சிங்கமுத்து - தொடருந்து பயணி
- ஸ்டன்ட் சிவா - கூலிப்படை தலைவர்
- கலைராணி - வளர்மதியின் பாட்டி
- கமலா கிருஷ்ணசாமி - கல்பனாவின் தாய்
- ஜார்ஜ் மரியான் - ஆலை ஊழியர்
- சாஷா - வளர்மதி
- ஜென்னி
- நரேந்திரா காந்தி - தொடருந்து காவல் அதிகாரி
- கௌதமி
- பாண்டி ரவி - காவல் அதிகாரி
- இ. ராம்தாசு
- தேனி முருகன்
- சூப்பர்குட் சுப்ரமணி
- இனியா - சிறப்புத் தோற்றம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். இது, இயக்குனர் கண்ணனுடன் இமான் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படமாகும். இப்படத்தில், நடிகை இலட்சுமி மேனன் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | குக்குரு குக்குரு | சத்யன் மகாலிங்கம், லட்சுமி மேனன் | ஏக்நாத் |
2 | மழைக்காத்தா | ஹரிசரண், வந்தனா சீனிவாசன், மரியா ராய் வின்சன்ட் | யுகபாரதி |
3 | ஓடும் ரயில் | அபய் ஜோத்பர்கர் | யுகபாரதி |
4 | ஒரு ஊருல | எம். கே. பாலாஜி, ஜெயமூர்த்தி | யுகபாரதி |
5 | சுந்தரி பெண்ணே | ஸ்ரேயா கோசல் | யுகபாரதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30.