சூரி
சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. இவர் மகாலட்சுமி என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு வெண்ணிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு.[2][3][4]
சூரி | |
---|---|
![]() 2016 இல் சூரி | |
பிறப்பு | சூரி முத்துசாமி 27 ஆகத்து 1977 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, மதுரை,ராஜாகூர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1998-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | மகாலட்சுமி |
தொழில்
தொகுதமிழ்த் திரையுலகில் நடிகராகும் நோக்கத்துடன் சூரி 1996 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்துசேர்ந்தார். பட வாய்ப்புகள் கிடைக்காததால், சிறிது காலம் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றினார்.[5]
அவ்வப்போது படங்களில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வேடங்களில் நடித்தார், குறிப்பாக வின்னர் (2003) போன்ற படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார்.[5] அதன் பிறகு எழில் இயக்கிய தீபாவளி படத்திலும் உதிரி வேடத்தில் நடித்தார்.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமான வெண்ணிலா கபடிகுழுவில் (2009) சூரி தோன்றினார். படத்தின் புகழ்பெற்ற 'பரோட்டா போட்டி' காட்சியின் காரணமாக "பரோட்டா" என்ற முன்னொட்டு விரைவில் இவரது பெயருடன் இணைந்தது, அதில் சூரியின் கதாபாத்திரம் 50 பரோட்டக்களை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பொய்க் கணக்குச் சொல்லும் உணவகக்காரிடம் நீ கள்ளாட்டம் ஆடுற கோட்ட எல்லாம் அழி நான் முதல்ல இருந்து சப்புடுறேன் என்று மீண்டும் 50 பரோட்டாக்களை சாப்பிடத் தயாராகும் காட்சி வரவேற்பைப் பெற்றது.[6] பின்னர் இவர் போராளி (2011), சுந்தர பாண்டியன் (2012), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013), ஜில்லா (2014) போன்ற வரவேற்பைப் பெற்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் பக்கவாட்டு பாத்திரங்களில் தோன்றினார்.[7] ரஜினி முருகன் (2016) இது நம்ம ஆளு (2016), வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (2016), சங்கிலி புங்கிலி கதவத் தொற (2017) ஆகிய படங்களிலும் இவரது துணைக் கதாபாத்திரங்கள் பாராட்டப்பட்டன.
2018 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா மற்றும் விக்ரமுடன் சாமி 2 ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நகைச்சுவை நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது, இதனால் சூரியே அதற்கடுத்த படங்கள் வழியாக பதிலளித்தார்.[8] பின்னர் வெற்றிகரமான நம்ம வீட்டு பிள்ளை (2019), சங்கத்தமிழன் (2019) ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.[9]
2023 ஆம் ஆண்டில், வெற்றிமாறனின் வரலாற்று குற்றவியல் பரபரப்பூட்டும் படமான விடுதலை பகுதி 1 இல் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமிருந்தும் மிகவும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது.[10] இதைத் தொடர்ந்து கருடன் (2024), காதல் நாடகப்படமான ஏழு கடல் ஏழு மலை (2024) ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் நடித்தார். மூன்று படங்களும் அவற்றின் இயக்கம் மற்றும் நடிப்பிற்காக பரவலாக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. கொட்டுக்களி மற்றும் ஏழு கடல் ஏழு மாலை ஆகியவை முறையே 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் 53வது சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமிலும் திரையிடப்பட்டன.
திரைப்படப் பட்டியல்
தொகுநடிகர்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1997 | காதலுக்கு மரியாதை | ||
1998 | மறுமலர்ச்சி | ||
1999 | சங்கமம் | ||
1999 | நினைவிருக்கும் வரை | ||
2000 | ஜேம்ஸ் பாண்டு | ||
2000 | கண்ணன் வருவான் | ||
2001 | உள்ளம் கொள்ளை போகுதே | Uncredited Role | |
2002 | ரெட் | Uncredited Role | |
2003 | வின்னர் | கைப்புள்ளையின் அடியாள் | |
2004 | காதல் (திரைப்படம்) | விடுதி தங்குபவர் | |
2004 | வர்ணஜாலம் | திருடன் | |
2005 | ஜி | கல்லூரி மாணவர் | |
2007 | தீபாவளி | ||
2007 | தண்டாயுதபாணி | தண்டாயுதபாணியின் நண்பன் | |
2007 | ஞாபகம் வருதே | ஜால்ரா சூரி | |
2007 | திருவக்கரை வக்கிரகாளியம்மன் | போலீஸ் கான்ஸ்டபிள் | |
2008 | கி.மு | நெத்திலி முருகன் | |
2008 | பீமா | சின்னாவின் அடியாள் | |
2009 | வெண்ணிலா கபடிக்குழு | சுப்பிரமணி | |
2009 | நாய்க்குட்டி | மாரி | |
2010 | நான் மகான் அல்ல | ரவி | |
2010 | களவாணி (திரைப்படம்) | மணிகண்டன் | |
2010 | அய்யனார் | ||
2010 | உனக்காக என் காதல் | பிளேடு பாலு | |
2010 | உனக்காக ஒரு கவிதை | வினோத்தின் நண்பன் | |
2011 | அப்பாவி | பாரதியின் நண்பன் | |
2011 | வர்மம் | குணா | |
2011 | ஆடு புலி (திரைப்படம்) | கருப்பு | |
2011 | குள்ளநரி கூட்டம் | முருகேசன் | |
2011 | அழகர்சாமியின் குதிரை | சந்திரன் | |
2011 | போடிநாயக்கனூர் கணேசன் | கிலக்கி | |
2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு | சூரி | |
2011 | வேலாயுதம் (திரைப்படம்) | அப்துல்லா | |
2011 | போராளி (திரைப்படம்) | சூரி | |
2011 | வாகை சூட வா | திரைப்படம் பார்க்கவந்த நபர் | |
2011 | குருசாமி | ||
2012 | சூரிய நகரம் | மெக்கானிக் | |
2012 | மாட்டுத்தாவணி | ராமின் நண்பன் | |
2012 | கண்டதும் காணாததும் | ||
2012 | மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) | நல்ல தம்பி | |
2012 | பாண்டி ஒலிபெருக்கி நிலையம் | சூரி | |
2012 | பாகை | வெள்ளியங்கிரி | |
2012 | சுந்தர பாண்டியன் (திரைப்படம்) | முருகேசன் | பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நகைச்சுவை நடிகர்) Pending—SIIMA Award for Best Comedian |
2012 | கை | ||
2013 | ஹரிதாஸ் | கந்தசாமி | |
2013 | கேடி பில்லா கில்லாடி ரங்கா | சிந்துரு | |
2013 | சிக்கி முக்கி | பாலாவின் நண்பர் | |
2013 | தில்லு முல்லு | மனோ | |
2013 | துள்ளி விளையாடு | ||
2013 | தேசிங்கு ராஜா (திரைப்படம்) | சூர்யா | |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) | கொடி | |
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) | சண்முகம் | |
2013 | நையாண்டி (திரைப்படம்) | சூரி | |
2013 | வெள்ளை தேசத்தின் இதயம் | ||
2013 | நளனும் நந்தினியும் | சிவபாலன் | |
2013 | நிமிர்ந்து நில் | இராமச்சந்திரன் | |
2013 | பாண்டிய நாடு (திரைப்படம்) | கணேசன் | |
2013 | ரம்மி | அருணாச்சலம் | |
2013 | புலிவால் | சொக்கு | |
2014 | ஜில்லா (2014 திரைப்படம்) | கோபால் | |
2014 | பிரம்மன் | என் பி கே | |
2014 | மான் கராத்தே | நடுவர் 'டைகர்’ டைசன் | சிறப்புத் தோற்றம் |
2014 | அஞ்சான் | இராஜா | வாடகை மகிழுந்து ஓட்டுநர் |
2014 | பட்டைய கெளப்பணும் பாண்டியா | முத்துப்பாண்டி | |
2014 | ஜீவா | சீனியர் டேவிட் | |
2014 | பூஜை | குட்டிப்புலி | |
2014 | கத்துக்குட்டி | ஜிஞ்சர் | |
2014 | ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | மைக் | |
2014 | வெள்ளைக்காரத்துரை | போலீஸ் பாண்டி | |
2015 | சகலகலா வல்லவன் | சின்னசாமி | |
2015 | பாயும்புலி | முருகேசன் | |
2015 | வேதாளம் | லக்ஷ்மி தாஸ் | |
2015 | பசங்க 2 | சஞ்சய் இராமசாமி | |
2016 | ரஜினி முருகன் | தோத்தாத்திரி | |
2016 | அரண்மனை 2 | தேவதாஸ் | |
2016 | மாப்ள சிங்கம் | அன்புச்செல்வனின் நண்பன் | |
2016 | மாவீரன் கிட்டு | தங்கராசு | |
2016 | மருது | கொக்கரக்கோ | |
2016 | இது நம்ம ஆளு | வாசு | |
2016 | வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் | சக்கரை | |
2016 | அங்காளி பங்காளி | ||
2016 | கத்திச்சண்டை | தேவா / சித்ரா மாஸ்டர் | |
2017 | சிங்கம் 3 | வீரபாகு | |
2017 | முப்பரிமாணம் | அவராகவே | |
2017 | சரவணன் இருக்க பயமேன் | கல்யாணம் | |
2017 | சங்கிலி புங்கிலி கதவ தொற | சூரணம் | |
2017 | தொண்டன் | இராமர் | |
2017 | ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் | சுருளி ராஜன் | |
2017 | பாக்கனும் போல இருக்கு | ||
2017 | சவரிக்காடு | ||
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | டைகர் பாண்டி | |
2017 | கதாநாயகன் | அண்ணாத்துரை |
-பாடகராக
தொகுஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|---|
2012 | பாகன் | "சிம்பா சிம்பா" | ஜேம்ஸ் வசந்தன் | பாண்டியுடன்[11] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Soori's Profile[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://behindwoods.com/தமிழ்-movie-news-1/dec-12-03/parotta-suri-sundarapமற்றும்ian-18-12-12.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://newஇந்தியாnexpress.com/entertainment/தமிழ்/A-lot-on-his-plate/2013/08/19/article1740673.ece[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.இந்தியாglitz.com/channels/தமிழ்/article/49674.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 5.0 5.1 Kumar, Pradeep (28 September 2019). "From Madurai to Chennai, and 13 years later: Soori's fascinating journey". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011141305/https://www.thehindu.com/entertainment/movies/from-madurai-to-chennai-and-13-years-later-sooris-fascinating-journey/article29542288.ece.
- ↑ "Soori reveals an important secret about the Parotta comedy - Tamil News - IndiaGlitz.com". 3 June 2016. Archived from the original on 2 May 2021. Retrieved 2 May 2021.
- ↑ "Actor Soori in great demand". 16 January 2014. Archived from the original on 4 August 2019. Retrieved 4 August 2019.
- ↑ "Soori blasts critics for slamming his comedy in Seema Raja and Saamy Square". Archived from the original on 2 May 2021. Retrieved 2 May 2021.
- ↑ "Soori: I know if it's a bad comedy even while acting; Sivakarthikeyan Vijay Sethupathi Namma Veettu- Cinema express". Cinema Express. Archived from the original on 2 May 2021. Retrieved 2 May 2021.
- ↑ Kuniyl, Sarath Ramesh (31 March 2023). "Viduthalai - Part 1 review: Soori steals the show in this Vetrimaaran flick". The Week. Archived from the original on 6 June 2023. Retrieved 29 November 2023.
- ↑ http://www.kollytalk.com/cinenews/parotta-soori-மற்றும்-pமற்றும்i-sing-a-kuthu-number-in-paagan-50606.html[தொடர்பிழந்த இணைப்பு]