சூரிய நகரம்

2012இல் வெளியான தமிழ் திரைப்படம்

சூரிய நகரம் (Sooriya Nagaram) என்பது 2012ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதை எம். செல்லமுத்து எழுதி இயக்கியிருந்தார். எக்ஸ். பி. ராஜன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் ராகுல் ரவீந்திரன், மீரா நந்தன், ஆர். வி. உதயகுமார், கஞ்சா கறுப்பு ஆகியோர் நடித்துள்ளனர். இது இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹானின் முதல் திரைப்படமாகும் (பென் வயல்லி என அழைக்கப்படுகிறார்). படம் 30 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது. இது வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் சிறப்பாக செயல்படவில்லை.

சூரிய நகரம்
இயக்கம்எம். செல்லமுத்து
தயாரிப்புஎக்ஸ். பி. ராஜன்
கதைஎம். செல்லமுத்து
இசைரான் ஈத்தன் யோஹான்
நடிப்புராகுல் ரவீந்திரன்
மீரா நந்தன்
ஆர். வி. உதயகுமார்
கஞ்சா கறுப்பு
சூரி
ஒளிப்பதிவுஜே. கே. வெங்கி
படத்தொகுப்புஎஸ். சுராஜ்கவி
கலையகம்ஏவி ஸ்கிரீன்ஸ்
வெளியீடு30 மார்ச் 2012.[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

சாதி வெறி கொண்ட சமூகம் ஒரு இளம் பெண்ணையும், அவளுடைய காதலனையும் அவளது சொந்த சகோதரனே கொல்வது போன்ற கதைய வெளிப்படுத்துகிறது.[2]

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

படத்திற்காக, குழுவினர் மதுரைக்கு அருகில் ஒரு வாகனம் பழுது பார்க்கும் இடம் போன்ற ஒரு அரங்கினை அமைத்திருந்தனர். முதல் காட்சி இங்கே படமாக்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா, முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார்.[3]

ஒலிப்பதிவு தொகு

வைரமுத்து எழுதிய அனைத்து பாடல்களுக்கும் அறிமுக இசையமைப்பாளர் பென் வயலி இசையமைத்திருந்தார். திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம் படத்தின் இசை உரிமையை வைத்திருக்கிறது.[4]

சான்றுகள் தொகு

  1. "BookmyShow Release". 30 March 2012.
  2. Manigandan, K. R. (31 March 2012). "Sooriya Nagaram Review". The Hindu. http://www.thehindu.com/features/cinema/sooriya-nagaram-a-tale-to-forget/article3266059.ece. 
  3. http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-10-03/suriya-nagaram-meera-nandan-20-03-10.html
  4. "Suriya Nagaram".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_நகரம்&oldid=3709123" இலிருந்து மீள்விக்கப்பட்டது