கத்துக்குட்டி

கத்துக்குட்டி (Kaththukkutti) என்பது 2015ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர். சரவணன் இயக்கத்தில், ராம்குமார் தயாரித்திருந்த இந்த படத்தில் நரேன் , சிருஷ்டி டங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் அக்டோபர் 2015இல் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் பார்வையாளர்களிடமிருந்து குறைந்த வரவேற்பே கிடைத்தது.[1]

கத்துக்குட்டி
இயக்கம்Era. Saravanan
தயாரிப்புR. Ramkumar
இசைAruldev
நடிப்புNarain
சிருஷ்டி டங்கே
Soori
ஒளிப்பதிவுSanthosh Sriram
கலையகம்OWN Productions
வெளியீடு9 October 2015
நாடுIndia
மொழிTamil

நடிப்பு தொகு

  • Narain as Arivazhagan
  • Soori as Ginger
  • சிருஷ்டி டங்கே as Bhuvana
  • Tulasi as Arivazhagan's mother
  • Bharathiraja as Santhanam, Arivazhagan's father
  • Raja as Bhuvana's father
  • V. Gnanavel as Maavattam
  • K. G. Mohan as Manjapai
  • Kadhal Saravanan
  • Theni Murugan
  • Nadhaswaram Kannan
  • Devipriya as herself
  • Sandhya in an item number

தயாரிப்பு தொகு

முகமூடி (2012) படத்துக்குப் பிறகு நரேன் அறிமுக இயக்குனர் சரவணனுடன் இணைந்து 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிகர்-இயக்குநர் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜும் நடித்துள்ளார். ஜூன் 2014இல் சந்தியா படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் படத்தில் சூரிக்கு இரண்டு ஜோடிகளில் ஒருவராக தோன்றுகிறர். மற்றொருவர் தேவிபிரியா.[2]

ஒலிப்பதிவு தொகு

படத்துக்கு இசையமைப்பாளர் அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

வரவேற்பு தொகு

சிஃபி "கத்துக்குட்டியின் ஒரே பிரச்சனை குறைந்த தயாரிப்பு தரம், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை சராசரியாகவே இருக்கிறது. ஆயினும்கூட, படம் அதன் நல்ல தருணங்களைக் கொண்டுள்ளது. ஒரு முறை பார்க்கலாம். நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். படத்தை "சராசரிக்கு மேல்" என்று விவரித்தது.[3]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்துக்குட்டி&oldid=3709277" இருந்து மீள்விக்கப்பட்டது