சந்தியா (நடிகை)

இந்திய நடிகை

சந்தியா (பிறப்பு - 1989, கேரளம்; இயற்பெயர் - ரேவதி), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். காதல் என்ற தமிழ்த் திரைப்படத்தில் 2004-ம் ஆண்டு அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழித் திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

சந்தியா
இயற் பெயர் ரேவதி
பிறப்பு செப்டம்பர் 27, 1988 (1988-09-27) (அகவை 35)[1]
இந்தியா கேரளம்,
வேறு பெயர் ரேவதி.[2]

பிறப்பும் வளர்ப்பும் தொகு

சந்தியா எனப்படும் இந்த நடிகையின் இயற்பெயர் ரேவதி என்பதாகும். இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.[சான்று தேவை] இவர் 2004 இல் வெளியான காதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படம் தமிழ்நாடு மாநில விருதையும், பிலிம்பேர் விருதையும் பெற்றது. இவர் தற்போது வரை காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய தகப்பனார் அஜித் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்தவர் மற்றும் தாயார் அழகுக்கலை நிபுணர் ஆவார். இவருடைய தாய்மொழி மலையாளம் ஆகும். இவர் சென்னையில் வித்யோதய்யா பிரைமரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்போது காதல் திரைப்பட கதாநாயகியாக நடித்ததால், பின் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.[சான்று தேவை]

திரைப்படவாழ்க்கையும் ,சொந்த வாழ்க்கையும் தொகு

காதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் தேர்வானவர் கோபிகா ஆவார். இப்படம் குறுகிய கால படம் என்பதால் புதுமுக நடிகையான சந்தியா அறிமுகம் ஆகி இப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்த டிஷ்யூம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார். 2017 வரை நாற்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த கம்பியூட்டர் துறையில் வேலை பார்க்கும் சந்திரசேகரன் என்பவரை மணந்தார். இவர்களது திருமணமானது குருவாயூர் கோவிலில் டிசம்பர் 6, 2015 இல் நடைபெற்றது. அப்போது சென்னையில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார்கள்.

நடித்துள்ள திரைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_(நடிகை)&oldid=3552839" இருந்து மீள்விக்கப்பட்டது